கொத்து கொத்தாக வாக்காளரை காணோமே.. பாஜகவுக்கு ஓட்டளித்த கடலூர் பெண்? அண்ணாமலையின் வெடி.. இதோ விளக்கம்
கடலூர்: கடலூர் பெண் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இளம்பெண்ணை யார் கொன்றது? ஏன் கொன்றார்கள்? என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
விறுவிறுப்பான நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தநிலையிலும்கூட, தமிழகத்தில் அதன் பரபரப்புகள் இன்னமும் அடங்கவில்லை... பதிவான வாக்கு சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது.. இதற்கான சில காரணங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

புகார்கள்: அதேபோல, அரசியல் கட்சிகள், ஒருவருக்கொருர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.. இது தொடர்பான புகார்களும் ஆணையத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புது குண்டை தன்னுடைய தொகுதியில் தூக்கி போட்டிருந்தார்... அதாவது, பல்லடம், சூலூர் என பல இடங்களில் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்கு செலுத்தி வருபவர்களுக்கு நிறைய இடங்களில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தேர்தலில் பெரிய அளவில் திட்டமிட்டு கோவையில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
மறுதேர்தல்: இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் மறு தேர்தல் நடத்தப்படுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. ஆனால், கோவை கலெக்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அவர்களால் ஏன் வாக்களிக்க இயலவில்லை என்று கூறி விளக்கம் ஒன்றை தந்திருந்ததையடுத்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
இதற்கு பிறகு கடலூர் பெண் கொலையில், அடுத்த குற்றச்சாட்டை கூறியிருந்தார்.. அதாவது, கடலூரில் இளம்பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.. இந்த பெண், பாஜகவிற்கு ஓட்டு போட்டதால்தான், திமுகவினர் அவரை அடித்து கொன்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது.. இதையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், திமுக அரசை விமர்சனம் செய்து காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு கடலூர் காவல்துறை மறுப்பு தெரிவித்து, விளக்கம் கூறியிருக்கிறது.
வாய் தகராறு: அதில், "கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ், (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்)
கலைமணி: ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும், ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது.
கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் PS Cr.No.96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
அதிரடி கைது: குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணிஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், (செய்தி தொடர்பான ) வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது" என்று காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
மறுப்பு: ஆக மொத்தம், ஒரே கிராமத்தில், ஒரே குடும்பத்தில் நடந்த சொந்த பிரச்சனை காரணமாக இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு கூறியிருக்கும் காவல்துறையின் இந்த அறிக்கைதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
முக்கியம்: நீங்கள் கூட்டு கடன் கணக்கை வைத்திருந்தால் அதனாலும்கூட பிரச்சனைகள் வரலாம்.. கூட்டுக்கடன் கணக்கு வைத்திருந்தால் கடன் வாங்கிய நபர் கடனை சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்தாவிட்டால், வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். அத்துடன், அந்த கடனையும் நீங்கள் தான் செலுத்த வேண்டும்.. எனவே, லோன் வாங்கும்போதும், அல்லது கூட்டு கடன் கணக்கு தொடங்குவதற்கு முன்பும் இவைகளை கருத்தில் கொள்வது அவசியம்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications