கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ட்விஸ்ட்.. முந்திரி வியாபாரியின் சடலம் இன்று மறுபடியும் போஸ்ட் மார்ட்டம்.. பரபரக்கும் கடலூர்

முந்திரி வியாபாரியின் சடலம் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது

Google Oneindia Tamil News

கடலூர்: "என் கணவர் உடம்பு சரியில்லாமல் இறக்கவில்லை.. போலீஸார் தாக்கியதில் தான் உயிரிழந்தார்.. அதனால் அவரது சடலத்தை மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும்" என்று நெய்வேலி முந்திரி வியாபாரியின் மனைவி பிரேமா, விருதாச்சலம் கோர்ட்டில் மனு அளித்திருந்தார்.. இந்த மனுவை விசாரித்த கோர்ட், சடலத்தை இன்று மறுஉடற்கூறு ஆய்விற்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வம்.. 40 வயதாகிறது.. மனைவி பெயர் பிரேமா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. செல்வா முந்திரி வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு செயின் பறிப்பு வழக்கில், செல்வத்தை போலீசார் கைது செய்து விருத்தாசலம் ஜெயிலில் அடைத்தனர்.. அங்கு அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை தந்தனர்..

 வலிப்பு நோய்

வலிப்பு நோய்

பிறகு மறுபடியும் ஜெயிலிலேயே கொண்டு வந்து அடைத்தபோது, செல்வத்துக்கு வலிப்பு நோய் வந்துள்ளதாக தெரிகிறது.. அதனால் மறுபடியும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதுதான், சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்துவிட்டார். இதையடுத்து, இந்த உயிரிழப்பு குறித்து மனைவி பிரேமா, நெய்வேலி மற்றும் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

பிணவறை

பிணவறை

இதையடுத்து எல்லா தரப்பிலும் விசாரணையும் ஆரம்பமானது.. வீடியோ ஆதாரத்துடன் பிரேமா, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. மேலும் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வத்தின் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை நடந்தது.. இதன்பிறகு பின்னர் செல்வமுருகன் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்பு

தொடர்பு

மேலும் விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். அதேபோல் மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்துவருகிறது... மேலும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. எனினும், தன் கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும் சொல்லி, செல்வத்தின் சடலத்தை பிரேமா இன்னும் வாங்கவில்லை..

 மனுதாக்கல்

மனுதாக்கல்

இந்த நிலையில், 'தன் கணவர் உடல் நலக் குறைவால் உயிரிழக்கவில்லை. போலீஸார் தாக்கியதில் தான் உயிரிழந்தார், அதனால் மறு உடற்கூறு ஆய்விற்கு உத்தரவு வழங்க கோரியும், மறு உடற்கூறாய்வினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும், ஆய்வின்போது மருத்துவ பேராசிரியர் ஒருவர், 2 டாக்டர்கள், தான், மற்றும் தனது வக்கீல் என மொத்தம் 5 நபர்கள் இருக்க உத்தரவு வழங்கக்கோரியும் விருத்தாசலம் கோர்ட்டில் நீதிமன்றத்தில் பிரேமா நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இந்த மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்தார்.. பிறகு, 'ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்வதற்கான வாய்மொழி உத்தரவு அளித்தார்... இதனை தொடர்ந்து இன்று செல்வத்தின் உடல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மறுபடியும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும் என்று தெரிகிறது.

English summary
Judge orders Re examination for Cuddalore Selvam death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X