திருநாவுக்கரசருக்கான இடம் காங்கிரஸில் எப்போதும் இருக்கும்.. புதிய தலைவர் அழகிரி
பண்ருட்டி: திருநாவுக்கரசர் நல்லமுறையில் செயல்பட்டார். மாற்றம் என்பது குறைபாடு அடிப்படையில் செய்யப்படவில்லை. திருநாவுக்கரசருக்கான இடம் தமிழக காங்கிரஸில் எப்போதும் இருக்கும்
என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கே. எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தில் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

கவுரவம்
அவர் கூறுகையில் நான் 50 ஆண்டுகளாக எளிய தொண்டனாக இருந்து வருகிறேன். ராகுல் காந்தி எனக்கு தலைவர் பதவி கொடுத்து கவுரவம் தந்துள்ளார். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவுக்கு
காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த கொள்கைகளை தூக்கி பிடித்து நிறுத்த வேண்டும் என்பதே எனது கொள்கையாகும். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இயற்கையான கூட்டணியாகும். திமுகவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்.

ஒத்துழைப்பு
தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் தேர்தல்களில் கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தார்.

பிரதமர் வேட்பாளர்
பிரதமர் வேட்பாளராக ராகுலை, அவர் முன் மொழிந்தது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே திமுகவுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம் என்றார் கே. எஸ். அழகிரி.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications