18, 16.. வயசைப் பாருங்க.. அதற்குள் காதல்.. பெற்றோர் எதிர்ப்பு.. கிணற்றில் விழுந்து தற்கொலை!
கடலூர்: பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியும், பிளஸ் 2 முடித்துள்ள மாணவரும் காதலித்துள்ளனர் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் ஜோடியாக கிணற்றில் குடித்து தற்கொலை கொண்டுள்ளனர். பள்ளிப்படிப்பு முடிக்கும் முன்பே காதலித்து அந்த காதல் கைகூடாமல் போகவே கிணற்றில் குடித்து தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளனர். கடலூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் பெயர் சிவரஞ்சன், அபிராமி என்பதாகும். திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவரின் மகன் சிவரஞ்சன் 18 வயதாகும் இவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.

கீழகல்பூண்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் அபிராமி 16 வயதாகும் இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
இருவரும் வேறு வேறு பள்ளியில் படித்த போதும் சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். விடுமுறை நேரத்திலும் காதல் வளர்ந்தது. பொது இடங்களில் சந்திப்பு நிகழ்ந்தது.
இருவரின் காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர். தடுக்க தடுக்கத்தான் காதலின் வேகம் கூடியது. இதையும் மீறி இருவரும் வயல்வெளியில் சந்தித்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் சத்தம் போடவே, இருவரும் நேராக கிணற்றில் சென்று ஜோடியாக குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திட்டக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர். அப்போது துப்பட்டாவால் கட்டிக்கொண்டு சேர்ந்தே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டனர். சினிமா பாணியில் இளம் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவரின் பெற்றோரையும் கலங்க வைத்துள்ளது.
சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்று எண்ணியே சேர்ந்து சாக முடிவு செய்து கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று கிராம மக்கள் கண்ணீர் மல்க கூறியது காண்பவர்களின் நெஞ்சத்தை கரைய வைத்தது.












Click it and Unblock the Notifications