• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மீண்டும் துயரம்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி.. கடலூரில் பரிதாபம்

|
  வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி, கடலூரில் பரிதாபம்

  கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (30) - கோமதி (26) தம்பதியர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.

  Mother and Child die after seeing the delivery in a house near Cuddalore

  கடந்த 2- ந்தேதி நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, கோமதிக்கு குழந்தை இறந்து பிறந்தது. பின்னர், குழந்தையை, வீட்டின் அருகே உறவினர்கள் புதைத்தனர்.

  மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் நடந்ததால் கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கோமதியை, சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  ஆனால் அங்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் அளிக்கபட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், கோமதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  போதிய மருத்துவ வசதியின்றியோ, மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் துணையின்றியோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

  அதே போல், திரைப்படங்கள் பார்த்து அதன் உத்வேகத்தினாலோ, யூடியூப் பார்த்தோ வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சிப்பதும், தாய் மற்றும் சேய்க்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகளை தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  கடலூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வருடம்
  வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
  2019
  டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் திமுக வென்றவர் 5,22,160 50% 1,43,983
  கோவிந்தசாமி பாமக தோற்றவர் 3,78,177 36% 1,43,983
  2014
  அருண்மொழிதேவன் எ அஇஅதிமுக வென்றவர் 4,81,429 49% 2,03,125
  நந்தகோபாலகிருஷ்ணன் கெ திமுக தோற்றவர் 2,78,304 29% 0
  2009
  அழகிரி எஸ் காங்கிரஸ் வென்றவர் 3,20,473 43% 23,532
  சம்பத் எம் சி அஇஅதிமுக தோற்றவர் 2,96,941 40% 0
  2004
  வேங்கடபதி. கெ திமுக வென்றவர் 4,00,059 53% 1,31,352
  ராஜேந்திரன். ஆர் அஇஅதிமுக தோற்றவர் 2,68,707 35% 0
  1999
  சங்கர், ஆதி திமுக வென்றவர் 3,58,367 50% 73,953
  தமோதரன் எம்.ஜி. அஇஅதிமுக தோற்றவர் 2,84,414 40% 0
  1998
  தமோதரன் எம்.ஜி. அஇஅதிமுக வென்றவர் 3,09,985 49% 27,129
  வெங்கடேசன் பி.ஆர்.எஸ். டி எம் சி ( எம்) தோற்றவர் 2,82,856 45% 0
  1996
  வெங்கடேசன் பி.ஆர்.எஸ் டி எம் சி ( எம்) வென்றவர் 3,89,660 56% 2,05,204
  சாந்தமூர்த்தி வி காங்கிரஸ் தோற்றவர் 1,84,456 27% 0
  1991
  கலியபெருமாள் பி.பி. காங்கிரஸ் வென்றவர் 3,60,445 58% 2,08,057
  புவராஹான் ஜி. ஜேடி தோற்றவர் 1,52,388 25% 0
  1989
  பி.ஆர்.எஸ். வெங்கடேசன் காங்கிரஸ் வென்றவர் 3,31,617 51% 1,16,835
  ஜி. பாஸ்கரன் திமுக தோற்றவர் 2,14,782 33% 0
  1984
  வெங்கடேசன் பி.ஆர்.எஸ். காங்கிரஸ் வென்றவர் 3,27,393 61% 1,31,954
  ராமு டி. அலிஸ் கிளிவளவன் திமுக தோற்றவர் 1,95,439 37% 0
  1980
  முத்துகுமாரன் ஆர். ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,62,694 59% 1,08,651
  அரவிந்தா பாலா பஜனோர் அஇஅதிமுக தோற்றவர் 1,54,043 35% 0
  1977
  புவராஹான் ஜி. காங்கிரஸ் வென்றவர் 2,31,128 56% 89,057
  ராதாகிருஷ்ணன் எஸ் என்சிஓ தோற்றவர் 1,42,071 34% 0
  1971
  எஸ். ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வென்றவர் 2,29,934 54% 36,487
  ஆர். முத்துகுமாரன் என்சிஓ தோற்றவர் 1,93,447 46% 0

   
   
   
  English summary
  Again tragedy, Mother and child die after seeing the delivery in house near Cuddalore.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more