விவசாயிகளிடம் பேசாமல் அரசியல்வாதிகளிடம் பேசுவதா?என்எல்சி நிர்வாகத்திற்குதவாக வேல்முருகன் எச்சரிக்கை!
கடலூர்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுப்பு, இழப்பீடு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகள் தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்க இருப்போருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட நெடிய நாட்களாக, குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது.
பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும்.

வேல்முருகன் அறிக்கை
வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சியில் நிரந்தர வேலையும், வேலை பெற விரும்பாதவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டத்தை, சமீபத்தில் கூட அனைத்து கட்சிகளின் சார்பில் எனது தலைமையில் முன்னெடுத்திருந்தேன். அதுதவிர இது தொடர்பாக விவசாயிகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தவாக வெளிநடப்பு
ஆனால், இதனை கருத்தில் கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்களை மட்டும் அழைத்து, வடலூரில் உள்ள மங்கையர்கரசி மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியுள்ளது ஏற்புடையதல்ல. இக்கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான நானும், நிர்வாகிகளும், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

காவல்துறையை வைத்து மிரட்டல்
இக்கூட்டம் நடப்பதை அறிந்த வந்த ஏராளமான விவசாயிகளை அனுமதிக்காமல், ஆங்காங்கே காவல்துறையை வைத்து மிரட்டியதும், விவசாயிகள் வந்த வாகனங்களை நிறுத்தி, சாவிகளை பறிமுதல் செய்ததும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி, நிலங்களை பறித்து விடலாம் என நினைப்பது, மனித உரிமைக்கு முரண்பாடானது. மாவட்ட நிர்வாகத்தின் அத்தகைய போக்கு சர்வாதிகாரத்துக்கு ஒப்பானது.

போராட்டம் வெடிக்கும்
எனவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுடனான சுமூக உறவை ஏற்படுத்திக்கொண்டு தான், நிலத்தை அளவீடு செய்வதற்கோ, நிலத்தை கையகப்படுத்துவதற்கோ செல்ல, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இதனை மீறி, காவல்துறை, என்எல்சி நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, மாவட்ட நிர்வாகம், நிலத்தை கையகப்படுத்த வந்தால், பாதிக்கப்பட்ட கிராம மக்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டம் வெடிக்கும்' என தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications