தமிழ்நாட்டில் உள்ளவங்களுக்கு அறிவே இல்லை.. முந்திரி தோப்புக்குள் நின்று ஆதங்கப்பட்ட தங்கர் பச்சான்
கடலூர்: தமிழ்நாட்டில் இருக்கிறவங்களுக்கு அறிவே இல்லை. முந்திரிபழம் எல்லாம் இங்கே வேஸ்டா போகுது. இதற்கு ஒரு தொழிற்சாலை அமைத்து பானம் தயாரித்தால் என்ன? என இயக்குனர் தங்கர்பச்சான் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு காலத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் ஒரு மூட்டை முந்திரி பருப்பின் விலையும் ஒன்றாக இருந்தது என்றும் அவர் பேசினார்.
இயக்குனர் தங்கர் பச்சான் கூறியதாவது:- முந்திரி பருப்பை மட்டும் எடுப்பாங்க. முந்திரி பழத்தை தூக்கி குப்பையில் போட்டுவிடுவார்கள். இத, ஆடு, மாடு சாப்பிடும். இல்லைன்னா அப்படியே மண்ணோடு மக்கி போய்டும். ஆனால் இந்த முந்திரி பழத்தை உலகத்தில மருந்தாகவும், பானமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிறவங்களுக்கு சுத்தமாக அறிவே இல்லை.

இத என்ன பண்ணியிருக்கனும்?.. கடலூர் மாவட்டம் பொருளாதாரத்தில் கடைசியில் நிற்கிறது. வறுமையில் இருக்கிறது, அதிக குடிசைப்பகுதிகளை கொண்ட இப்படி ஒரு இடத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லையே?. . என்ன பண்ணுறாங்ன்னா, அவங்க கட்சியை சேர்ந்தவர்களுக்கு அந்த சாராய ஆலை கெமிக்கலில் போட்டு கொடுத்துடுறாங்க.
இத குடிச்சி 120க்கு மேற்பட்டவங்ளோட தாலி பறிக்கப்பட்டுச்சு. அரசாங்கம் வித்த சாராயத்தை குடிச்சதால தான் இப்படி ஆச்சு.. இத சொல்லி தான் எங்க ஊருக்கு வந்த கடையை நிறுத்தினோம்.. இந்த பழத்தின் மூலமாக பானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கொண்டு வரனும். அதனை பயன்படுத்தனும். பொருளாதாரத்தில் எங்கேயோ போயிடலாம்.
இந்த ஆண்டு வழக்கமாக பெய்யக்கூடிய மழையை காட்டிலும் கடலூரில் மிக குறைவாகவே மழை பெய்துள்ளது. வேளாண்மையையே முழு தொழிலாக கொண்டவர்கள் தான் இங்கு அதிகம். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தண்ணீரை எல்லாம் உறிஞ்சி.. உறிஞ்சி இப்போது தண்ணீர் 850அடிக்கு கீழே போய்விட்டது.
ஒரு முந்திரி மரத்திற்க்கு 5 அடிக்கு கீழ் வேர் போகாது. அப்போது எப்படி அந்த மரம் தண்ணீரை எடுத்துக்கொள்ளும். முன்னாடி பூக்கள் பூத்து குழுங்கும். ஆனால் இப்போது பார்த்தீர்கள் என்றால் பூக்கள் எல்லாம் கருகி போய் இருக்கிறது. விளைச்சல் 2, 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று நினைத்த எனக்கு இது ரொம்ம ஏமாற்றமளிக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் ஒரு பவுணின் விலையும் ஒரு மூட்டை முந்திக்கொட்டையின் விலையும் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது பார்த்தோம் என்றால், தங்கம் ஒரு பவுண் விலை ரூ. 55 ஆயிரமும் ஒரு மூட்டை முந்திரிக்கொட்டையின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. 10 மடங்கு இந்த மக்களை பலி வாங்கிவிட்டது.
இதனை இதுவரை கண்டுக்கொள்ளாத மத்திய, மாநில அரசுகள் என்னோட மற்றும் விவசாயிகளின் நிலைமையை நீங்கள் நினைத்து பார்க்க வெண்டும். முந்திரிக்கொட்டை பறிக்க கூட ஆட்கள் வருவதில்லை. அந்த அளவிற்கு விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. ஏற்றுமதி, இறக்குமதியில் பெரிதாக பாதிக்கப்பட்டது இந்த முந்திரிக்கொட்டை தான்.
உலகத்திலேயே முந்திரி பருப்பு அதிக சுவை கொண்டது பண்ருட்டி முந்திரி தான். பார்க்க சிறிதாக இருக்கும். சுவை உச்சம்.. பருப்பு சுருக்கத்துடன் இருக்கும். கம் மாதிரி அப்டியே ஒட்டிக்கொள்ளும். ஆனால் வெளிநாட்டில் இருந்து சுருக்கம் இல்லாத, சுவையில்லாத விளம்பர முந்திரி தான் அதிகம் விற்கப்படுகிறது. மத்திய அரசு இறக்குமதி கொள்கையை சரி செய்ய வேண்டும். மாநில அரசு இதனை சொல்லி செய்ய வைக்க வேண்டும்.
நான் கம்போடியோ, தாய்லாந்து, இந்தோனேஷியா போனேன். அங்கெல்லாம் முந்திரி பயிரிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள் ஆக இருக்கிறார்கள். முந்திரி பருப்பை மட்டுமல்ல.. பழத்தில் இருந்து பானங்கள் தயார் செய்கிறார்கள். பழத்தில் இருந்து மதுபானம், குளிர்பானங்கள் தயார் செய்யலாம். இந்த பழத்தை எல்லாம் ஆடு மாடு தின்றுகொண்டிருக்கிறது.
கோவாவில் செரி என்ற பானத்தை என்ன விலை கொடுத்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வருது. இது எல்லாம் ஏன் நம்ம தமிழக அரசு செய்யவே இல்லை. எனக்கு புரியவே இல்லை. இத்தனை அதிகாரிகள், அமைச்சர்கள் இருந்து ஏன் எதுவும் செய்ய மாட்டுக்கிறாங்க.. இந்த ஆண்டாவது இதற்கு ஒரு திட்டத்தை கொண்டுவாங்க.. இவ்வாறு அவர் பேசினார்.
திரைப்பட இயக்குநர், நடிகருமான தங்கர் பச்சான் அரசியல் களத்திலும் கால் பதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக கடலூரில் தங்கம் பசான் களம் இறங்கினார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்னு பிரசாத்தும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக சிவகொழுந்தும் போட்டியிட்டனர். முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் சமூக வலைதள பக்கத்தில் தங்கர் பச்சாசன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அந்த வகையில் முந்திரி தோட்டத்தில் நின்ற படி, அதன் முக்கியத்துவம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications