அமைச்சர் பங்கேற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மின் தடை! நொந்துகொண்ட திமுக நிர்வாகிகள்!
கடலூர்: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மின் தடை ஏற்பட்டதால் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த திமுக நிர்வாகிகள் நொந்துகொண்டனர்.
அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் பொதுக்கூட்டத்தின் போது மின் தடை ஏற்பட்டால் அது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் என்ன நினைக்க வைக்கும் என்பதை உணர்ந்த அமைச்சர் கணேசன் டென்ஷன் ஆகியிருக்கிறார்.

திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கலந்துகொண்டார்.
அப்போது அவருக்கு முன்னதாக பேசிய நிர்வாகி ஒருவர், அரசின் சாதனை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, மின் தடையில்லாத நிலை என அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் பவர் கட் ஆனது.
அமைச்சர் கணேசனுக்கு மின் வாரிய அதிகாரிகள் மீது உச்சக்கட்ட கோபம் வந்த நிலையிலும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என பேசப்படும் நிலையில் எந்த சர்ச்சையும் வேண்டாம் என அமைதி காத்திருக்கிறார்.
இதனிடையே திமுக நிர்வாகிகள் மின் வாரிய அதிகாரிகளுக்கு மாறி மாறி போன் அடித்த நிலையில் சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது. மின் தடை ஏற்பட்ட சில நிமிடங்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிக்காரர்கள் மொபைலில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து கூச்சலிடத் தொடங்கினர்.
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மின் தடை ஏற்பட்டதால் மூன்று மின் வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது மின் தடை ஏற்பட்டதால் மின் வாரிய அதிகாரிகளுக்கு போன் போட்டு ஓபன் மைக்கில் திட்டினார் அமைச்சர் துரைமுருகன்.
ஆனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் சர்ச்சையை தவிர்ப்பதற்காக தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications