ஸ்மார்ட் கரெப்ஷன்..திமுக ஆட்சியில் பேய் லஞ்சம்! தவெக ஆட்சியில் காட்டேரி லஞ்சம்! எழுந்த பகீர் புகார்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: பத்திரப்பதிவுத் துறையில் கடந்த ஆட்சி காலத்தில் பேய் போல லஞ்சத்தை பெற்று வந்த நிலையில், தற்போதுள்ள தவெக ஆட்சியில் காட்டேரி போன்று லஞ்சங்கள் வாங்கப்படுவதாகவும், மொத்தத்தில் இந்த ஆட்சியில் ஸ்மார்ட் கரப்ஷன் நடைபெற்று வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் லஞ்சம் ஊழல் இல்லாத நிர்வாகம் நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும் பள்ளிக் கல்வித் துறை, சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக கட்டமைக்கப்பட்டு வந்தது.

Real Estate Corruption tvk

ஆனால் உண்மையிலேயே நிலைமை அப்படி இல்லை என்கின்றனர். அரசு அலுவலகங்களில் கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்காமல் அவர்களாகவே லஞ்சம் தரும் அளவுக்கு தள்ளப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தின் அரசு அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதே நிலைதான் நீடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தவெக ஆட்சி

இந்நிலையில் தவெக ஆட்சியில் ஸ்மார்ட் கரப்ஷன் நடைபெற்று வருவதாகஅகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

லஞ்சம்

நிகழ்ச்சியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர்," தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுக்காக கொண்டுவரப்படும் கோப்புகள் உரிய காரணம் இல்லாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. மக்கள் தாமகவே லஞ்சம் கொடுக்க கூடிய அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை

காரண காரியம் இல்லாமல் கோப்புகளை நிலுவையில் வைக்கும் அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினந்தோறும் கொலை கொள்ளைகள் நடைபெற்று வருகிறது, அரசு அலுவலர்கள் லஞ்சம் பெற்றதாக தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையை கையில் வைத்துக் கொண்டு லஞ்சம் கேட்காமலே கொடுக்க தூண்டப்படுவதாகவும், இதுதான் இன்றைய அரசின் சாதனையாக உள்ளது.

காட்டேரி லஞ்சம்

கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளை நகர பகுதிகளுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படுவதால் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. பத்திரப்பதிவுத் துறையில் கடந்த ஆட்சி காலத்தில் பேய் போல லஞ்சத்தை பெற்று வந்த நிலையில், தற்போதுள்ள தாவெக ஆட்சியில் காட்டேரி போன்று லஞ்சங்கள் வாங்கப்படுகிறது.

ஸ்மார்ட் கரப்ஷன்

மொத்தத்தில் இந்த ஆட்சியில் ஸ்மார்ட் கரப்ஷன் நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதை ஒழுங்குபடுத்தாவிட்டால் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் அறவழி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+