குக்கரில் இருந்து எட்டிப்பார்த்த "தலை".. அலறி அடித்து ஓடிய குடும்பம்.. மீண்டும் நடுங்கிப்போன கடலூர்
கிச்சனில் குக்கருக்குள் நல்ல பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
கடலூர்: கிச்சனில் குக்கருக்குள் வந்த வினோத சத்தத்தை கேட்டு மொத்த குடும்பத்தினரும் அலறிவிட்டனர்.. இந்த பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் கடலூரில் மீண்டும் நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கடலூரில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தது.. மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு வயதான பாட்டி, அவருடைய பெட்ரூமில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்..
அப்போது விடிகாலையில் பாட்டி படுக்கையில் திரும்பி படுக்க முயன்றபோது, விசித்திரமான சத்தம் ஒன்று பக்கத்திலேயே கேட்டுள்ளது..

பெட்ரூம்
அதனால், எழுந்து சென்று லைட்டை போட்டு பார்த்துள்ளார். அப்போதுதான், தன்னுடைய படுக்கையில் ஒரு பாம்பு இருப்பதை கண்டு அலறினார்.. படுக்கையில் அந்த பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.. இதனால் செய்வதறியாது தவித்த குடும்பத்தினர், பாம்பு பிடிக்கும் செல்லா என்ற நபருக்கு தகவல் தந்து அவரை உடனடியாக வரவழைத்தனர்.. செல்லாவும், பாட்டி வீட்டுக்கு வந்து அந்த பாம்பை பிடிக்க முயன்றபோது, அவரால் முடியவில்லை..

படுக்கையறை
பெட் மேலேயே படமெடுத்து அந்த நல்லபாம்பு ஆடியது.. ஆக்ரோஷமாக கடிக்கவும் முற்பட்டது. இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்த பாம்பு, பாட்டியுடன் எப்படி இரவெல்லாம் படுத்து தூங்கியிருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார் செல்லா.. இறுதியில் பாம்பை பிடித்து கொண்டுபோனார்.. கொடியில் காய்ந்த துணிகளை கொண்டு வந்து படுக்கையில் பாட்டி போட்டிருக்கிறார்.. ஒருவேளை காய்ந்த துணிகளுடன் சேர்ந்து அந்தப் பாம்பும் உள்ளே வந்து இருக்கலாம் என்று செல்லா அப்போது சொல்லியிருந்தார்.

கிச்சனில் சத்தம்
இப்போதும் அதே போன்ற ஒரு சம்பவம் இதே கடலூரில் நடந்துள்ளது.. அதே செல்லாதான் இங்கேயும் வந்துள்ளார்.. கம்மியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி இளமாறன். அவரது வீட்டின் கிச்சனில் பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து, வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டுள்ளது... அது பாம்பு சத்தமாக இருக்கலாம் என்று சந்தேகித்த குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் வீரரான செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

வினோதமான சத்தம்
செல்லாவும் கிச்சனுக்கு சென்று வினோதமான சத்தம் வந்த இடத்தை ஆராய்ந்தார்.. பாத்திரங்களுக்கு நடுவில் இருந்து சத்தம் கேட்டாலும், எங்கிருந்து சத்தம் வருகிறது என்பதை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்த்தார் செல்லா.. அப்போது அங்கிருந்த பெரிய குக்கரையும் எட்டிப் பார்த்தார்.. திடீரென ஒரு நல்ல பாம்பு தலையை தூக்கி காட்டியது...

நல்ல பாம்பு
இதைபார்த்து குடும்பத்தினர் அலறிவிட்டனர்.. அந்த பாம்பு 4 அடி நீளம் கொண்டதாக இருந்தது.. ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த நல்ல பாம்பை இறுதியில் லாவகமாக பிடித்துவிட்டார் செல்லா.. அதை பாதுகாப்பாக காப்புக் காட்டிலும் கொண்டு போய் விட்டார்... ஆனால், குக்கருக்குள் எப்படி அந்த பாம்பு போயிருக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.. எப்போது வந்து குக்கருக்குள் புகுந்தது என்றும் தெரியவில்லை.. குக்கரில் நல்ல பாம்பு இருந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications