எங்ககிட்ட 4 எம்எல்ஏ இருக்காங்க.. மாஸ்க் அணியாட்டி என் வண்டியை நிறுத்துவீங்களா.. விசிக வழக்கறிஞர்
கடலூர்: நான் விசிக கட்சிக்காரன், எங்களின் வாகனங்களையே வழி மறிக்கிறீர்களா என கேட்ட இளைஞர் மீது குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயில்வே பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குறிஞ்சிப்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொளஞ்சி என்பவர் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது அதை ஓட்டி வந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியை சேர்ந்த காளி முகக்கவசம் அணியாமலும் தலைக்கவசம் அணியாமலும் வந்ததால் அவரது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீஸார் கேட்டுள்ளனர்.

நான் விசிக கட்சி
அப்போது காளி "நான் விசிக கட்சிக்காரன். எங்களின் வாகனங்களையே மறிக்கிறீர்களா. எங்கள் கைவசம் 4 எம்எல்ஏ உள்ளனர். நானே ஒரு வழக்கறிஞர்தான். எங்களது வாகனங்களை நீங்கள் எப்படி நிறுத்தலாம்? என கேட்டு காவல் துறையினரை காளி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

வைரல் வீடியோ
காளி பேசியதை போலீஸார் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் ஒருமையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாக்குவாதம்
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி நகரச் செயலாளராக உள்ள பாலமுருகனின் தம்பி என கூறப்படுகிறது. ஏற்கெனவே இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காரர் என கூறிக் கொண்டு ஊரடங்கின் போது வெளியே வந்ததால் அவரை போலீஸார் விசாரித்த போது அவர்களை அந்த நபர் மிரட்டியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன.

ஊரடங்கை மீறலாமா
ஊரடங்கை மீறியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியும் சிலர் வெளியே வரும்போது போலீஸார் அவர்களை வழிமறித்து அபராதம் விதிக்க முற்பட்டால் இதுபோல் தான் ஒரு கட்சிக்காரன், வழக்கறிஞர் என கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications