பிளாக்கில் சரக்கு.. புகார் கொடுத்த என்னை, போலீசார் போட்டுக் கொடுத்துட்டாங்க.. கடலூர் இளைஞர் புலம்பல்
கடலூர்: பிளாக்கில் சரக்கு விற்பவரை போலீசிடம் போனில் புகார் கொடுத்தேன்.. புகார் கொடுத்த என்னையே சரக்கு விற்பவரிடம் போலீஸ் போட்டு கொடுத்ததால் அவர்கள் என்னை வெட்டுவதற்காக வெறி கொண்டு அலைகிறார்கள்..இதனால் நான் பயத்தில் தலைமறைவாக இருக்கிறேன் என்று இளைஞர் ஒருவர் கூறும் ஆடியோ வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளுடன் கூடிய பார்களில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாகவும், அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. சில போலீசார் பிளாக்கில் சரக்கு விற்கும் பார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுடன் இணைந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாராம். ஆனால் போலீசாரோ, தனது தொலைப்பேசி எண்ணை மதுவிற்பனை செய்பவர்களுக்கு கொடுத்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, மீண்டும் 100க்கு போன் செய்து ஒருவர் புலம்பிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கன்னிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேசுதாஸ், இதனால் உயிருக்கு பயந்து தோப்பிற்குள் பதுங்கி உள்ளதாகவும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். 100க்கு போன் செய்த அந்த ஆடியோவில் ஜேசுதாஸ் , காலையில் இருந்து 3 கால்கள் பண்ணியிருக்கிறேன் ஐயா என்று கூறுகிறார்.
எதிர்முனையில் பேசும் காவலர், உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்கிறார்.. அதற்கு ஜேசுதாஸ், ஐயா, பிளாக்கில் சரக்கு விற்குறாங்க, போலீசில் புகார் அளிக்க வேண்டும், போலீஸ் ஸ்டேசனுக்கு கனெக்சன் கொடுங்க என்று கேட்டேன்.. ஆனால் அவர்கள் என் நம்பரை என்ன செய்தார்கள் என்றால், இவன் தான் புகார் அளித்தான் என்று கூறி சரக்கு விற்றவர்களிடம் என் நம்பரை போட்டுக் கொடுத்துவிட்டார்கள்..
அவர்கள் என்னடான்னா.. போலீசுக்கு நீதானடா போன் பண்ணினாய் என்று சொல்லி மிரட்டினார்கள். ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் இருந்து உன் நம்பரை எனக்கு கொடுத்தார்கள். நீ எதற்கு கால் செய்தாய்.. உன்னை வெட்டாமல் விட மாட்டோம் என்று கூறி கொலைவெறியுடன் தேடுகிறார்கள்.. நான் தோப்பில் தண்ணீர் கூட இல்லாமல் ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்...
நான் ஒளிந்திருக்கும் இடம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழியப்பன் கொவில், நாச்சியார்பேட்டை என்று கூறுகிறார்.. அதன்பின்னர் சரக்கு விற்பனை விவகாரத்தில் ஸ்டேசனில் உள்ளவர்கள் தான் முக்கிய காரணம்.. ஒன்றுமில்லை சார்.. உயிர் தானே போகப்போகிறது " என்று புலம்புகிறார் ஜேசுதாஸ்.. இப்படியாக ஆடியோ முடிகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications