சகோதரரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்ற பெண்.. பிச்சாவரம் ஆற்றில் காருடன் மூழ்கி பலி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கார் ஓட்ட பயிற்சி பெற்றபோது காருடன் ஆற்று நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் கீழ வீதியில் மாலன் ஜுவல்லரி நகைக் கடை உரிமையாளர் மங்கேஷ்குமார். இவருடைய மனைவி சுபாங்கி (47). இவர் தனது சகோதரர் நாம்தேவிடம் கார் ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கேட்டார்.

அப்போது நாம் தேவும் ஒப்புக் கொண்டு தனது சொந்த காரில் சுபாங்கிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார். இன்று காலை சிதம்பரத்திலிருந்து தெற்கு பிச்சாவரம் வரை காரை ஓட்டினார் சுபாங்கி.
அங்குள்ள பாலம் அருகே கார் சென்றுவிட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி காரை சுபாங்கி ஓட்டி வந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள உப்பனாற்றில் பாய்ந்து உள்ளே விழுந்தது. உடனே அவரது உறவினர் ராம்தேவ் காரில் இருந்து வெளியே குதித்துவிட்டார்.

ஆனால் காருக்குள் இருந்த சுபாங்கி மாட்டிக் கொண்டார். இதில் கார் முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி சம்பவ இடத்திலேயே மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
உள்ளே இறந்த நிலையில் சுவாங்கி இருந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது ஆற்றில் கார் மூழ்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications