டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 ஆண்டு மோடி ஆட்சியில் 10 ஆயிரம் மதக்கலவரங்கள்! ‛பகீர்’ ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ரிப்போர்ட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 10,000 மதக்கலவரங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கட்சி மத்தியில் 2014ல் ஆட்சியை பிடித்தது. தொடர்ச்சியாக 8 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட வில்லை என தொடர்ச்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

மோடி வாழ்க! ஸ்டாலின் வாழ்க! நேரு விளையாட்டு அரங்கில் பாஜக, திமுகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பு மோடி வாழ்க! ஸ்டாலின் வாழ்க! நேரு விளையாட்டு அரங்கில் பாஜக, திமுகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பு

காங்கிரஸ் ரிப்போர்ட் கார்டு

காங்கிரஸ் ரிப்போர்ட் கார்டு

இந்நிலையில் தான் 8 ஆண்டு ஆட்சியை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் சார்பில் ‛8 சால் 8 சல் பாஜ்பா சர்க்கார் விபால்' என ரிப்போர்ட் கார்டு டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கன், செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த ரிப்போர்ட் கார்டை வெளியிட்டனர். இதையடுத்து இருவரும் கூறியதாவது: :

 10000 மதக்கலவரங்கள்

10000 மதக்கலவரங்கள்


பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் சுமார் 10000 ஆயிரம் மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. மதத்தை முன்வைத்து வன்முறை, கலவரங்கள் நடந்தால் பாஜக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இதுதான் பாஜகவினர் செயல் திட்டமாகும்.

பேரழிவு கொள்கைகள்

பேரழிவு கொள்கைகள்

பாஜகவினரின் பேரழிவு கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தின் மீது ஒன்றன் பின் ஒன்றாக மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரம் தற்போது பாஜகவின் 8 ஆண்டுகா்கால ஆட்சியில் பெரும் சரிவில் இருக்கிறது. இதற்கு தவறான பொருளாதார கொள்கை, ஆட்சிமுறை தான் காரணம்.

 மக்களை ஏமாற்றும் அரசு

மக்களை ஏமாற்றும் அரசு

பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றுவதில் சாதனை செய்துள்ளது. கலால் வரியை உயர்த்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது. தற்போது அதனை குறைத்து மக்கள் சார்பு அரசாக காட்டி கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதகிரித்துள்ளது.

Recommended Video

    31,000 கோடி.. 11 திட்டங்கள்.. PM Modi தொடங்கி வைக்கும் திட்டங்கள் #Politics
     பொருளாதார நெருக்கடி

    பொருளாதார நெருக்கடி

    மேலும் இந்தியாவின் 45 ஆண்டுகால சாதனையை பாஜக முறியடித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. மேலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் கரைந்து வருவதால் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது'' என்றனர்.

    English summary
    The report card has been issued on behalf of the Congress as the Union government led by Prime Minister Narendra Modi prepares to complete its eight-year rule. The Congress has blamed about 10,000 religious riots during the eight-year rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X