டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனத்தூய்மையை ஆய்வு செய்யும் மத்திய அரசு.. ”வேண்டாம், ஆபத்து“ 122 கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் உள்ள இனங்களின் தூய்மை குறித்து ஆய்வு செய்யும் மத்திய கலாச்சாரத்துறையின் திட்டத்துக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வரலாற்று அறிஞர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், செயற்பாட்டாளர்களை அடங்கிய 122 பேர் கொண்ட குழு கடிதம் எழுதி இருக்கிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் மத்திய கலாச்சாரத்துறை, இந்தியாவில் வாழும் இனங்களின் தூய்மையையும் மரபியல் தொடர்ச்சியையும் கண்டறிய டி.என்.ஏ. ஆய்வுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே! சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே!

ஏற்கனவே சாதி, மத அடிப்படையில் பிளவுபட்டும், ஏற்றத்தாழ்வுடனும் இருக்கும் இந்திய சமூகத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என அப்போதே இதற்கு பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

கலாச்சாரத்துறை செயலாளர் ஆலோசனை

கலாச்சாரத்துறை செயலாளர் ஆலோசனை

இத்திட்டம் தொடர்பாக மத்திய கலாச்சரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், பிரபல தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் எஸ்.வசந்த் ஷிண்டே மற்றும் லக்னோவை சேர்ந்த பீர்பால்-சஹானி பழங்கால அறிவியலை கல்வி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் 3 மாதங்களுக்கு முன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

மரபணு தூய்மையை கண்டறிய முயற்சி

மரபணு தூய்மையை கண்டறிய முயற்சி

இதுகுறித்து கருத்து தெரிவித்த எஸ்.வசந்த் ஷிண்டே, "10,000 ஆண்டுகளில் எப்படி மரபணுக்கள் உருமாற்றம் அடைகின்றன என்பதையும் இந்தியாவில் மரபணுக்கு எப்படி மற்ற மரபணு வரிசையும் கலக்கின்றன் என்பதையும் ஆய்வு செய்ய உள்ளோம். இது இந்தியாவில் இனத்தூய்மையை கண்டறிவதற்கான முயற்சியாக பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

122 பேர் கண்டனம்

122 பேர் கண்டனம்

இதனை கண்டித்து 122 பேர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், மத்திய அரசின் இந்த திட்டம் அபத்தமானது மற்றும் ஆபத்தானது என்று எச்சரித்து உள்ளனர். "இன மரபு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே செயலிழந்துவிட்டது. இனத் தூய்மை தொடர்பான எந்த ஆய்வையும் தற்போதும் எதிர்காலத்திலும் நடத்த விடக்கூடாது. இதற்கு பகிரங்கமான மறுப்பை வெளியிட வேண்டும்.

சாதி அடிப்படையில் துன்புறுத்தல்

சாதி அடிப்படையில் துன்புறுத்தல்

தூய்மை குறைவானவை என்று கூறப்படும் இனங்கள், அதிக தூய்மையானவை என்று சொல்லப்பட்ட இனங்களால் கடுமையான இன்னல்களையும், அநீதியையும் எதிர்கொண்டு இருப்பதை மனித வரலாற்றின் பல இடங்களில் எடுத்துக்காட்டாக நாம் கூற முடியும். சாதி அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவது நிறுத்தப்பட வேண்டும்.

நாடு பிளவுபடும் அபாயம்

நாடு பிளவுபடும் அபாயம்

அத்துடன் இந்தியாவின் எந்த ஒரு கொள்கையையும் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடக் கூடாது. இந்த திட்டத்தின் மூலம் என்ன முடிவை மத்திய கலாச்சாரத் துறை எதிர்பார்க்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், இனத் தூய்மை விசயத்தில் கை வைத்தால் இந்தியர்களுக்கு இடையிலான ஒற்றுமை சீரழியும் என்பது மட்டும் உண்மை.

English summary
122 people of Activists, Scientists condemning Union government plan on to study racial purity: இந்தியாவில் உள்ள இனங்களின் தூய்மை குறித்து ஆய்வு செய்யும் மத்திய கலாச்சாரத்துறையின் திட்டத்துக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வரலாற்று அறிஞர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், செயற்பாட்டாளர்களை அடங்கிய 122 பேர் கொண்ட குழு கடிதம் எழுதி இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X