டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் மொத்தம் 418 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் 2 மடங்கு அதிகமாக உள்ளன.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.04 கோடியாக உயர்வு உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.04 கோடியாக உயர்வு

24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா

24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5,66,840 ஆக அதிகரித்து. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 418 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,893 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகம்

மகாராஷ்டிராவில் அதிகம்

மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 1,69,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் மொத்தம் 7610 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதற்கு அடுத்ததாக தமிழகம் மீண்டும் 2-வது இடத்துக்கு வந்துள்ளது.

தமிழகம் மீண்டும் 2-வது இடம்

தமிழகம் மீண்டும் 2-வது இடம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,141 ஆகவும் இருக்கிறது. 3-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 85,161 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2680 ஆகவும் இருக்கிறது.

வட இந்தியாவில் மரணங்கள்

வட இந்தியாவில் மரணங்கள்

குஜராத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1827 ஆக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 672 பேரும் மேற்கு வங்கத்தில் 653 பேரும் கொரோனாவால் மரணித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 564 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

English summary
Total 18,522 fresh cases of coronavirus were recorded in India on Tuesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X