டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருவனுக்கு ஒருத்தி மலையேறிப் போய்விட்டதா? கள்ளக்காதலுக்கு காத்து கிடக்கும் இந்தியர்கள் 20 சதவீதமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி : குடும்பம் திருமணம் சமூகம் கலாச்சாரம் என பண்டைய பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவுகளுக்காக வெளிநாட்டு டேட்டிங் செயல்களில் சுமார் 20 சதவீதம் இந்தியர்கள் பதிவு செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்த நவீன செல்போன் யுகத்தில் எந்த அளவு தங்களது கருத்துக்களை பொதுமக்கள் வெளியிட முடியுமோ அதே அளவு பிரச்சனைகளும் இருந்திருக்கிறது. பண மோசடி ஏன் வாழ்க்கையே தொலைக்கும் நிகழ்வுகளும் இந்த செல்போன் செயலிகளால் நிகழ்ந்து வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்க்கையையே தொலைத்தவர்கள் ஏராளம் இருக்க, தற்போது டின்டர் அன்பே உள்ளிட்ட டேட்டிங் செயலிகளும் இருக்கிறது.

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

இதுமட்டுமின்றி ஓரினச்சேர்க்கைக்கு கூட செயலிகள் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து மோசடி கும்பலும் தங்களது கைவரிசைகளை மற்றொருபுறம் அரங்கேற்றி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் செல்போன் ஆப் மூலம் இளைஞர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது கூட அனைவருக்கும் தெரிந்ததே.

க்லீடன் ஆப்

க்லீடன் ஆப்

இது ஒருபுறம் இருக்க குடும்பம் திருமணம் சமூகம் கலாச்சாரம் என பண்டைய பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவுகளுக்காக வெளிநாட்டு டேட்டிங் செயல்களில் சுமார் 20 சதவீதம் இந்தியர்கள் பதிவு செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திருமண உறவுகள் தாண்டிய முறையற்ற உறவுகளுக்காக க்லீடன் என்ற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த செயலி செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி அதில் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி பயனாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து தங்கள் திருமணம் கடந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து வருகின்றனர்.

 இந்தியர்கள் அதிகம்

இந்தியர்கள் அதிகம்

அந்த ஒரு கோடி பேரில் 2 மில்லியன் அதாவது 20 லட்சம் பணியாளர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில் அந்த செயலியின் யூஸர்கள் வெறும் 17 லட்சமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 18 சதவீதத்திற்கும் மேலான புதிய பயனாளர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். அதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் தற்போதைய சூழலில் 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த 20 லட்சம் பேரில் சுமார் 60 சதவீதம் பேர் சென்னை டெல்லி பெங்களூரு கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் 34 சதவீதம் பேர் சிறு நகரங்களை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.

குடும்ப பெண்கள்

குடும்ப பெண்கள்

அதுமட்டுமல்லாமல் சமூகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே உயர்வருக்கு பின்னணி கொண்டவர்கள் என்பதும், ஆயிரக்கணக்கில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் இல்லத்தரசிகளும் இருப்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இந்த செயலில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் 26 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் ஆண்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியா ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாரக மந்திரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. அப்படி ஒரு நாட்டில் இது போன்ற திருமணம் கடந்த உறவுகளுக்கான செயலில் இந்தியர்கள் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி என்கின்றனர் ஆய்வாளர்கள்.

English summary
It has now come to light that around 20 percent of Indians register foreign dating activities for extra-marital relationships in India, which adheres to ancient customs of family, marriage, society and culture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X