இந்தியாவில் மொத்தமாக முடிவுக்கு வரும் 2000 ரூபாய் நோட்டு.. புழக்கத்தில் எத்தனை லட்சம் கோடி தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் எத்தனை லட்சம் கோடி என்ற தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ள நிலையில் அதுபற்றி விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, நாடு முழுவதம் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டுகளும், பின்னர் 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் தற்போது 2000 நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பார்ப்தே அரிதாகிவிட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை தொடர்ந்து செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். வேண்டிய ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலின் படி, 89 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2017ல் வெளியிடப்பட்டன. மார்ச் 2018ன் படி 6.73 லட்சம் கோடி ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அதாவது 37.3 சதவீதம் என்கிற அளவில் புழக்கம் இருந்தன. ஆனால் 2023 மார்ச் 31ன் படி 3.62 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications