டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 3-வது நாளாக கொரோனாவால் குணமடைந்து வருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு- மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பால் குணமடைந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

 34,602 Corona Patients discharged in Last 24 hours

மூன்றாவது நாளாக,தொடர்ந்து ஒரு நாளில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,602 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 8,17,208 ஆகும்.

இதனால் கொவிட்-19 தொற்றிலிருந்து நோயாளிகள் குணமடையும் விகிதம் 63.45 விழுக்காடு என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொவிட்-19 தொற்றினால் சிகிச்சை பெற்று வருபவர்களை (இன்று 4,40,135) விட 3,77,073 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் திருச்சியில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - 1098 இல் புகார் கொடுங்க கொரோனா காலத்தில் திருச்சியில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - 1098 இல் புகார் கொடுங்க

இந்த இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளாலும், முன்னணியில் உள்ள மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பாலும், குணமடைவோர் விகிதம் அதிகரித்து, இறப்பு விகிதம் தொடர்ந்து குறைகிறது. தற்போது இத்தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.38 விழுக்காடு மட்டுமே.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
The trend of highest ever single day recoveries of COVID-19 patients continues unabated. For the third day in a row, the last 24 hours have recorded another high with 34,602 patients recovering.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X