ஆந்திராவில் ஜெகன் கொடி.. ஒடிசாவில் தொடரும் நவீன் ராஜ்யம்.. அதிர வைத்த 4 மாநில தேர்தல் முடிவுகள்!
லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்துள்ளார். ஒடிசாவில் நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக நடந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஏப்ரல் 11ம் தேதி இந்தியாவில் லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியானது.

மாநில தேர்தல்
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.இதில் ஆந்திர பிரதேசம், சிக்கிமில் கடுமையான போட்டி நிலவியது. அதேபோல் ஒடிசாவில் மீண்டும் நவீன் பட்நாயக் ஆட்சியை பிடிப்பாரா என்று கேள்வி எழுந்து இருந்தது.

ஆந்திர பிரதேசம் தேர்தல்
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும். இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அருணாச்சலப்பிரதேச தேர்தல்
அருணாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் 60 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது பாஜக கட்சி 33 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பெரும்பான்மை பெற்று அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் 3 இடங்களிலும், என்பிபி 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வென்றது.

சிக்கிம் தேர்தல்
சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

ஒடிசா தேர்தல்
ஒடிசாவில் மொத்தம் 147 இடங்களில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 74 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 113 இடங்களில் வென்று மீண்டும் 5 வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளது. அங்கு காங்கிரஸ் 9 இடங்களையும், பாஜக 22இடங்களையும் வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் வென்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications