இந்தியாவில் மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு.. எந்தெந்த நகரங்களில் பாதிப்பு அதிகம்?
டெல்லி: இந்தியாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா அலை போட்டு புரட்டியெடுத்தது. ஒரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட, மறுபக்கம் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
தற்போது இத்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிக தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,263 கொரோனா பாதிப்புகள் பதிவாகின.

இது நேற்றைய பாதிப்பை விட 14% அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 338 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த பதிப்புகளில்1.19 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.48 சதவீதமாக இருக்கிறது. நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,196 பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. 181 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்1,71,295 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் 16 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்ட நேர்மறை விகிதம்(பாசிட்டிவ் ரேட்) மீண்டும் 17.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 4,174 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 65 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.அகமதுநகர் மாவட்டம் அதிகபட்சமாக 786 புதிய நோய் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து புனே மாவட்டம் 529 பாதிப்பை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது 47,880 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,38,082 ஆக உள்ளது. டெல்லியில் குறைந்தது 1,42,51,101 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 1.19 சதவிகிதம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.48 சதவிகிதமாக இருக்கிறது. தினசரி நேர்மறை விகிதம்(பாசிடிவ் ரேட்) இப்போது 2.38 சதவீதமாக உள்ளது.
நாட்டில் போடப்படும் கொரோனா தடுப்பூசி அளவுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 71 கோடியைத் தாண்டியுள்ளது. புதன்கிழமை இரவு 7 மணி வரை 73 லட்சத்துக்கும் அதிகமான (73,80,510) தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டன. 10 கோடி தடுப்பூசிகளை தொடுவதற்கு இந்தியா 85 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும்,. 20 கோடியை தாண்டுவதற்கு 45 நாட்களும், 30 கோடியை எட்ட 29 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
30 கோடி டோஸ்களிலிருந்து 40 கோடி தடுப்பூசிகளை எட்ட 24 நாட்கள் ஆனது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி 50 கோடி தடுப்பூசிகளைக் கடக்க 20 நாட்கள் ஆனது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகமாக இருப்பதால் விரைவில்100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications