குழந்தைகளில் 45% பேருக்கு இரட்டை இலக்க எண் தெரியவில்லை.. டெல்லியில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளில் 45 சதவீதம் பேருக்கு இரட்டை இலக்க எண் என்றும் 25 சதவீதம் பேருக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கணக்கெடுப்பு தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களின் 30 குழந்தைகள் இல்லங்களில் நடத்தப்பட்டது. 6 முதல் 18 வயதுக்குட்பட்ட 400 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமை ஆணையம்

குழந்தைகள் உரிமை ஆணையம்

டெல்லி குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளன. இதில் 100 குழந்தைகள் டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் படிப்பவர்கள், மூன்றில் ஒருங்கு தென், தென்கிழக்கு டெல்லியில் படிப்பவர்கள். ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் 12-15 வயதுக்குட்பட்டவர்களே ஆவார்கள்.

இந்தி படிக்க தெரியவில்லை

இந்தி படிக்க தெரியவில்லை

குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை பலப்படுத்துதல் மற்றும் கணிதத்திறமையை மேம்படுத்துவதற்கே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 37.5 சதவிகித குழந்தைகளுக்கு சரிவர இந்தி படிக்க தெரியவில்லை என்பதும் 18 சதவிகிதம் குழந்தைகளுக்கு இந்தி எழுத்துக்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வில் கிடைத்துள்ளன.

25 சதவீத குழந்தைகள்

25 சதவீத குழந்தைகள்

25 சதவீதக் குழந்தைகளுக்கு கணிதத்தில் எண்கள் குறித்த அடையாளமே தெரியவில்லை, 45 சதவீதம் குழந்தைகளுக்கு கணிதத்தில் இரட்டை இலக்க எண் எதுவென்று கேட்டால் தெரியவில்லை என்பதும் அதிர்ச்சி மிக்க தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனுராக் குந்து கூறியதாவது:- கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி குறித்து தென், தென்கிழக்கு டெல்லியில் உள்ள காப்பகங்களில் ஆய்வு நடத்தினோம்.

பயிற்சியை தொடங்கி விட்டோம்

பயிற்சியை தொடங்கி விட்டோம்

இந்த ஆய்வின் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைத் தொடங்கிவி்ட்டோம். குழந்தைகள் 100 சதவீதம் இந்தி மொழியை சரளமாகப் படிக்க வேண்டும், கணித்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல்,வகுத்தல் போன்ற அடிப்படையை தடையின்றி கற்க வேண்டும் என்பதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளோம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+