இந்த 5 மாநிலங்களில் கட்டுக்கடங்காத கொரோனா.. எச்சரிக்கும் மத்திய அரசு.. லிஸ்டில் உள்ள தேர்தல் மாநிலம்
டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாம், சண்டிகர் ஆகிய மாநிலங்களுடன் தேர்தல் நடைபெறும் கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் நாட்டின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனா குறித்த செய்திகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் மக்கள் மாஸ்க்குகளை அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டுதல்களை முறைாக பின்பற்றாமல் இருப்பதே கொரோனா பரவல் அதிகரித்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

5 மாநிலங்கள்
இந்நிலையில் தற்போது நாட்டிலுள்ள 80% கொரோனா நோயாளிகள் ஐந்து மாநிலங்களில் மட்டும் உள்ளதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தற்போதுள்ள நாட்டிலுள்ள கொரோனா நோயாளிகளில் சுமார் 61% மகாராஷ்டிராவில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவிரக் கர்நாடகா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
மேலும், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழகம், குஜதார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக உறுதி செய்யப்படும் கொரோனா வழக்குகளில் 84.73% இந்த மாநிலங்களில் இருப்பதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 53, 158 பேருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,52,566ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் நேற்று மட்டும் 355 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான், ஒடிசா, லடாக் உள்ளிட்ட 14 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனா காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழக்கவில்லை.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்v
கொரோனா பரவல் அதிகரித்துள்ள அதேநேரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 6.30 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் சுமார் 90 லட்சம் பேருக்குத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications