வாஞ்சிநாதன்னா யாரு? தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள்.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வாஞ்சிநாதன் பெருமை குறித்து பேசினார்.
ஒவ்வொரு மாதமும் இந்திய பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
இதுவரை 90 முறை உரையாற்றியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று 91-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் காணொலி காட்சி வாயிலாக மக்களிடம் பேசினார்.

எப்படி உணர்வார்கள்
இந்தியா சுதந்திரம் அடைந்து தனது 75-வது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இது ஒரு புகழ்பெற்ற வரலாற்று நினைவு என பேசியுள்ளார். இந்த நிக்ழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-அடிமை வாழ்வு காலத்தில் வாழ்ந்திருந்தவர்கள் இப்போது எப்படி உணர்வார்கள். இந்தியா விடுதலை அடைந்த அந்த தருணத்தை அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை விழித்தெழும் போது நம் நாடு இந்தியா எப்போது விடுதலை அடையும் என்ற காலம் முடிந்துவிட்டது.

வாஞ்சிநாதன் பெருமை
வருங்கால மக்களுக்காக அவர்களது செய்த தியாகத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டுக்காக தனது உயிர் உள்பட அனைத்தையும் அவர்கள் தியாகம் செய்தனர். தமிழ்நாடு மக்களோடு நீங்கள் பேசும்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சி என்ற ரெயில் நிலையம் பற்றி அவர்கள் சொல்வார்கள். இந்த ரெயில் நிலையத்தில் தான் 25 வயதான வாஞ்சிநாதன் என்பவர் பிரிட்டிஷ்காரர்களின் தவறான செயல்களுக்காக எதிர்த்து நின்று தண்டனையை பெற்றார். அவரை பற்றி தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும்
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' ஒரு பெரிய இயக்கமாக மாறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்திய சுதந்திர வீரர்களை நினைவுப்படுத்த, நான அனைவரும் ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தங்கள் வீடுகளின் முன்பு தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும். ஆகஸ்ட் 2 -ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சமூக வலைத்தளங்களில் சுதந்திரம் தொடர்பான படங்களையும், அதற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை பற்றியும், இந்திய தேசிய கொடியின் வரலாற்றையும் நினைவுப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் புரொபைல் படமாக தேசியக்கொடியை வைத்துக்கொள்ளுங்கள்.

பெருமை அளிக்கிறது
நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழாவை, நினைத்து பெருமை கொள்கிறேன். உடலை மனதுடனும் ஒன்றிணைப்பதாக உள்ளது. இந்திய தேசிய கொடியை உருவாக்கியவர்களை நினைவுப்படுத்துகிறேன். அவர்களது பங்கு அளப்பறியது. தற்போதைய காலத்தில் பல்வேறுப்பட்ட கலாசாரத்துடன் ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவில் பழைய சுதந்திர நினைவுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பல்வேறு பிரிவுகள் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை தேடி தரும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமை அளிக்கிறது. இதேபோல அக்டோபர் மாதத்தில் U-17 பெண்கள் FIFA உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications