டெல்லியில் பிரமாண்ட போராட்டம்.. 3-வது அணியா? வாய்ப்பு இல்லங்க.. கெத்து காட்டிய காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜனதாவுக்கு மாற்று அணியாக நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் இன்று ராகுல் காந்தி தலைமையில் டெல்லி ராம்லீலாவில் நடந்த பிரமாண்ட போராட்டம் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லி ராம்லீலா காங்கிரஸ் கட்சி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்த போராட்டத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

காலையில் இருந்தே வர தொடங்கினர்

காலையில் இருந்தே வர தொடங்கினர்

காலை முதலே போராட்ட களத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் படையெடுக்க தொடங்கினர். அண்டை மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்டமாக வந்தனர். குறிப்பாக அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பஸ் வேன்களில் தொண்டர்கள் ஆரவாரத்துட டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு வந்தனர்.

பிரமாண்ட போராட்டம்

பிரமாண்ட போராட்டம்

போராட்டத்தில் பங்கேற்கும் காங்கிரஸ் கட்சியினருக்காக ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு இருந்தது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்தியபடியும் பாஜக அரசு கொண்டு வந்த விலைவாசி உயர்வுக்கு கண்டன கோஷங்கள் எழுப்பியபடியும் பேரணியாக ராம்லீலா மைதான நோக்கி வந்தனர். ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டதால் மைதானம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டன.

கை அசைத்த ராகுல் காந்தி

கை அசைத்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி நண்பகல் அளவில் போரட்ட களத்திற்கு வருகை தந்தார். மேடைக்கு வந்த ராகுல் காந்தியை பார்த்ததும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி சிரித்த முகத்துடன் கை அசைத்தார். ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , கார்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார், மூத்த தலைவர்கள் ராஜீவ் சுக்லா, தீபந்தர் ஹூடா, ஜெய்ராம் ரமேஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் வந்தனர்.

முக்கியத்துவம் பெற்ற போராட்டம்

முக்கியத்துவம் பெற்ற போராட்டம்

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சி, தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ள இந்த போராட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் எனத்தெரிகிறது. ராகுல் காந்தி 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று நடத்துகிற இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

கட்சியினர் உற்சாகம்

கட்சியினர் உற்சாகம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பதாக வெளியான தகவலும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில் அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், வரும் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பாத யாத்திரயை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியினருக்கு புத்துயிரை ஊட்டும் வகையில் இந்த பாத யாத்திரை அமையும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்கு அச்சாரமாக இன்று பிரம்மாண்ட போராட்டமும் டெல்லியில் நடைபெற்று வருவது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 3-வது அணி

3-வது அணி

மத்தியில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத 3-வது அணியை உருவாக்க மாநில கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக ஆலோசனை நடப்பதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் 3-வது அணி அமைக்கும் முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+