மணமக்களுடன் முதலிரவில் பங்கேற்கும் தாய்! பழங்குடியினரின் அதிர வைக்கும் பழக்கம்! எங்கு தெரியுமா?
டெல்லி: புதுமணத் தம்பதிகளின் முதலிரவின் போது மணமகளின் தாயும் பங்கேற்கும் வித்தியாசமான, நெளியவைக்கும் ஒரு சடங்கு ஆப்பிரிக்க நாட்டின் ஒரு பழங்குடியினர் மத்தியில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சுவாமிக்கு செய்யும் சடங்கு, வழிபாட்டு நடைமுறைகள், இறப்புக்கான சடங்குகள், பிறப்புக்கான சடங்குகள் என நடைமுறை ஒவ்வொருவருக்கும் மாறி கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்தியாவை விட்டு வெளியே சென்றால் சில நாடுகளில் வினோத சம்பவங்களும் நடக்கின்றன.

நமீபியாவில் ஹிம்பா எனப்படும் பழங்குடியின மக்கள் பாலியல் இச்சைக்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகிறார்கள். இவர்கள் நமீபியாவில் 50 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். இவர்களுக்கென வீடு வாசல் இருந்தாலும், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டாலோ அதீத மழை பெய்தாலோ இவர்கள் வேறு இடங்களுக்கு செல்வர்.
தங்கள் ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் மனைவியை கணவன்மார்கள் மனப்பூர்வமாக விருந்தாக்குகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான பழக்கவழக்கம் இருந்து வருகிறது. அது போல் இந்தோனேசியாவில் புன்காக் என்ற பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இது மேற்கு ஜாவாவில் உள்ள பிரசித்தி பெற்ற மலையாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை அங்குள்ள உள்ளூர் பழங்குடியின பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு அவர்களுடன் பாலியல் உறவு கொள்கிறார்கள். அந்த நபர் அந்த பகுதியை விட்டு வெளியேறும் போது அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்துவிடுவார்.
அவரும் அங்கிருந்து சென்றுவிடுவார். அத்துடன் அந்த திருமணம் முறிந்துவிடும். அது போல் அடுத்தவர் வருவார், அவரை திருமணம் செய்வார்கள். பிறகு பாலியல் உறவு, செட்டில்மென்ட், விலகுதல் என ரிப்பீட்டு மோடில் செல்லும். இப்படியான கலாச்சாரங்கள் இருந்து வரும் நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் ஒரு பழங்குடியின பிரிவில் வித்தியாசமான பழக்கவழக்கம் பின்பற்றப்படுகிறது.
அதாவது திருமணமான தம்பதிகளுடன் முதலிரவு அறைக்கு பால், பழம், ஊதுபத்தியை தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த பழங்குடியினரின் பழக்கவழக்கத்தின்படி மணமகளின் தாயும் முதலிரவில் பங்கேற்பாராம். என்னடா இது சோதனை என நினைக்காதீர்கள். இது ஏன் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் சொல்கிறார்கள்.
மணமக்களுக்கு எப்படி அன்புடனும் அரவணைப்புடனும் வாழ வேண்டும் என்பதை மணமகளின் தாய் சொல்லித் தருவாராம். அத்துடன் மகளுக்கு முதலிரவு பாடத்தையும் அவர் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு தனது மகளின் முதலிரவில் தாய் இருப்பதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை உறுதி செய்வாராம் அந்த தாய். என்ன ஒரு வினோதம்!
ஒரு வேளை, அந்த பெண்ணின் தாய் இறந்துவிட்டாலோ, அல்லது கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தாலோ அந்த பெண் வீட்டில் வயதான மூத்த பெண்மணி முதலிரவு அறைக்கு செல்வாராம். அவர் போய் முதலிரவு குறித்தும் வாழ்க்கை குறித்தும் சொல்லித் தருவாராம். இந்த அபத்தமான பழக்கம் குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள் பார்ப்போம்.












Click it and Unblock the Notifications