இளம்பெண் பலாத்கார வழக்கு.. அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைன் அதிரடி கைது..பரபர தகவல்!
டெல்லி: வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைன் கைது செய்யப்பட்டார்.
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபாரில் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஜிதேந்திர நரைன் மீது இளம் பெண் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போர்ட் பிளேரில் உள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 21 வயது பெண் புகார் அளித்து இருந்தார்.

வேலை வாங்கி தருவதாக பலாத்காரம்
தனது புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறப்பட்டதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ஜிதேந்திர நரைனை சந்தித்தேன். அப்போது வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொழிலாளர் நல கமிஷனர் ஆர்.எல்.ரிஷியும் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.

ஜிதேந்திர நரேன் இடைநீக்கம்
கடந்த மே 1 ஆம் தேதியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்" என்று தெரிவித்து இருந்தார். தலைமைச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பில் உள்ளவர் மீது முன்வைக்கப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணின் புகார் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதும் டெல்லி நிதி கழககத்தில் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய ஜிதேந்திர நரேனை மத்திய அரசு இடை நீக்கம் செய்தது.

ஜாமீன் மனு நிராகரிப்பு
இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே, தனக்கு முன் ஜாமீன் கோரி ஜிதேந்திர நரைன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். செசன்ஸ் நீதிமன்றத்தை ஜாமீன் கேட்டு அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்படி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

ஜிதேந்திர நரைன் கைது
இதையடுத்து ஜிதேந்திர நரைனை சிறப்பு விசாரணைக்குழு கைது செய்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆர்.எல் ரிஷி தலைமைறைவாகிவிட்டதால் அவரை சிறப்பு விசாரணைக்குழு தீவிரமாக தேடி வருகிறது. ஆர்.எல் ரிஷிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல் உரிமையாளர் ரின்க்
ஆர்.எல். ரிஷிதான் தலைமைச்செயலாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதன் முதலில் அழைத்துச்சென்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணை ரிஷிக்கு அறிமுகப்படுத்திய ஓட்டல் உரிமையாளர் ரின்கும் தலைமறைவாகியுள்ளார். அவரையும் சிறப்பு விசாரணைக்குழு தேடி வருகிறது












Click it and Unblock the Notifications