"செத்த அப்பறமும் சாரதா என்னை பார்த்தாள்".. அலறவிட்ட அப்தாப்.. சிரித்தபடியே வாக்குமூலம்.. சைக்கோவா?
டெல்லி: சாரதாவின் உயிர் போன பின்னரும் தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் பார்த்துக் கொண்டிருந்ததாக காதலன் அப்தாப் கூறிய வார்த்தை, உண்மையைில் டெல்லி போலீஸாரையே உமிழ்நீரை விழுங்கச் செய்துள்ளது.
டெல்லியில் தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சாரதாவை அவரது காதலன் அப்தாப் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொலை செய்ததோடு விட்டிருந்தால் கூட இந்த சம்பவம் இத்தனை பெரிதாக மாறி இருக்காது.
ஆனால், சாரதாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை சிறிது சிறிதாக பல நாட்கள் அப்புறப்படுத்திய அப்தாப்பின் செயல்தான் இந்த சம்பவத்தை ஹாட் டாப்பிக்காக மாற்றியுள்ளது.

சுற்றிலும் கேமராக்கள் - "சைக்கோவா.."
இந்த வழக்கில் அப்தாப்பை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் இரண்டு தினங்களாக விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு தெரியாமலேயே அப்தாப்பை 24 மணிநேரம் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மனநல நிபுணர்களின் ஆய்வுக்காக இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. அப்தாப் ஒரு சைக்கோவா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, சைக்கோபாத் (Psychopath) மனிதர்களிடம் விசாரணை நடத்தும் போது அவர்களின் குணாதிசயத்தை கண்டுபிடிப்பது சிரமம். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் அதை காட்டிக்கொடுத்து விடும். அதற்காக, அப்தாப் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

சிரிப்பு - அழுகை..
அப்போது அவரை செயல்பாடுகளை பார்த்த மனநல நிபுணர்கள் அவர் சைக்கோபாத்தாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். ஏனெனில், தனது காதலியை கொடூரமாக கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ஏதும் அப்தாப்பிடம் வெளிப்படவில்லை. மாறாக, மூன்று வேளை உணவை சரியாக சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்குகிறார் அப்தாப். அது மட்டுமல்லாமல், விசாரணையின் போது இடையிடையே சிரிப்பதும், அழுவதுமாக மாறி மாறி உணர்ச்சிகளை அவர் காட்டுவதாகவும் மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, சைக்கோ மனிதர்களின் மனம்தான் இப்படி அலைபாய்ந்து கொண்டே இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஜோக் வேறு..
இதனிடையே, இன்று காலை அப்தாப்பிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அவரது நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, "சாரதாவை கொல்வது மிகவும் எளிதாகதான் இருந்தது. ஆனால், அவரது உடலை வெட்டி அப்புறப்படுத்துவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது" என ஜோக் அடிக்கும் பாணியில் அப்தாப் பேசியுள்ளார்.

பார்த்துக் கொண்டிருந்த சாரதா..
அதேபோல, இன்று நடைபெற்ற விசாரணையின் போது அப்தாப் பேசியதை கேட்டு போலீஸாரே சற்று பயந்துவிட்டதாக கூறப்படுகிறது. எப்படி கொலை செய்தேன், எதை வைத்து சாரதாவின் உடலை வெட்டினேன், எப்படி பேக் பண்ணி அப்புறப்படுத்தினேன் என்பதை விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தார் அப்தாப். அப்போது திடீரென, நடந்தது எல்லாவறறையும் சாரதாவும் தானே பார்த்துக் கொண்டிருந்தார் என அவர் கூற, போலீஸாருக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. ஏதாவது அமானுஷ்யமாக இருக்குமா என போலீஸார் உற்று கவனிக்க, அவரோ கூலாக, "அதுதான் சாரதாவின் தலைதான் ஃப்ரிட்ஜில் இருந்ததே.. அது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கும்" எனக் கூறியுள்ளார் அப்தாப். அப்தாப்பின் இந்த நடவடிக்கைகளை பார்த்த மனநல நிபுணர்கள், அவர் சைக்கோபாத் என்பது ஓரளவுக்கு நிரூபணமாகியுள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications