டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவை தொடர்ந்து.. இந்தியாவுடன் மோதும் சீனா.. "எவரெஸ்ட்" அத்துமீறல்.. ஆசியாவில் புது பதற்றம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிம் எல்லையில் இன்று காலையில் ஏற்பட்ட சண்டை காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அமெரிக்காவுடன் சண்டை போட்டு வரும் சீனா தற்போது இந்தியாவுடனும் சண்டை போட தொடங்கி உள்ளது.

Recommended Video

    அமெரிக்காவை தொடர்ந்து.. இந்தியாவுடன் மோதும் சீனா

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனா மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் இருக்கிறது. முக்கியமாக கொரோனா குறித்த பல்வேறு உண்மைகளை சீனா மறைத்துவிட்டது என்று சீனா மீது உலக நாடுகள் கடும் புகார்களை வைத்து வருகிறது.

    முக்கியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா. ஜப்பான் ஆகிய நாடுகள் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் சீனா மீது இந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன் சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன்

    இந்தியாவுடன் சண்டை

    இந்தியாவுடன் சண்டை

    இந்த நிலையில்தான் இன்று புதிய திருப்பமாக சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் இந்த சண்டை வந்துள்ளது. நேற்று நடு இரவில் இந்த சண்டை நடந்துள்ளது. 5000 மீட்டர் உயரம் இருக்கும் மலை பகுதிக்கு அருகே உள்ள எல்லை பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. முதலில் வாய் தகராறாக இந்த சண்டை தொடங்கியது.

    சண்டைக்கு காரணம்

    சண்டைக்கு காரணம்

    சிக்கிம் பகுதியில் இருக்கும் சில இடங்களை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்த பகுதிகளை இந்தியாவும் உரிமை கொண்டாடுகிறது. இதுதான் சண்டைக்கு காரணம். நேற்று முதலில் இரண்டு நாட்டு வீரர்களும் வார்த்தை போரில் எல்லையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இந்த சண்டை பெரிதாகவே கற்கற்களை கொண்டு சீன வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து துப்பாக்கியால் மாறி மாறி இரண்டு நாட்டு வீரர்களும் சுட்டுக்கொண்டனர்.

    காயம் அடைந்தனர்

    காயம் அடைந்தனர்

    இந்த தாக்குதலில் இந்தியா வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த சண்டை பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பெரிதாகும் என்று கூறுகிறார்கள். இப்போதைக்கு இது பேச்சுவார்த்தை மூலம் தீரும் பிரச்சனை இல்லை. நகு லா பகுதியில் இதற்கு முன் சண்டை வந்தது இல்லை . ஆனால் இப்போது அங்கேயே சண்டை வந்துள்ளது.

    அதிகரிக்கும் பதற்றம்

    அதிகரிக்கும் பதற்றம்

    அமைதியான நகு லா பகுதியில் கூட சண்டை வந்துள்ளது. முன்பெல்லாம் டோக்லாம் பகுதியில் மட்டுமே சண்டை வரும். டோக்லாம் பகுதியில் கடந்த 73 நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இப்போது சிக்கிம் எல்லை முழுக்க பதற்றம் நிலவுகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் எவரெஸ்ட் சிகரத்தின் பெரும் பகுதியை திபெத் வரைபடத்திற்கு சீனா மாற்றி புதிய வரைபடம் வெளியிட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை மொத்தமாக கைப்பற்றும் வகையில் சீனா இந்த செயலை செய்துள்ளது.

    எவரெஸ்ட் சிகரம்

    எவரெஸ்ட் சிகரம்

    எவரெஸ்ட் திபெத் நாட்டிற்குள் வருகிறது. திபெத் எங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூற தொடங்கி உள்ளது. இதற்கான வரைபடத்தை இன்று சீனா வெளியிட்டுள்ளது.சிக்கிமில் அத்துமீறும் அதே நேரத்தில் சீனா இப்படி செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் தெற்காசியாவில் பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பின் ஆசியாவை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு இந்த சண்டை வழிவகுக்கும் என்கிறார்கள்.

    தொடரும் சண்டை

    தொடரும் சண்டை

    ஏற்கனவே சீனா அமெரிக்காவுடன் சண்டை போட்டு வருகிறது. சீனாவிற்கு எதிராக இந்தியாவை வளர்த்துவிட, இந்தியாவில் முதலீடுகளை செய்ய அமெரிக்கா முயன்று வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு இதுவும் கூட காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதுதான் சண்டையின் தொடக்கம் என்கிறார்கள். கொரோனா பரவல் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் போர் மூள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தென் சீன கடல் எல்லையில் கடுமையான போர் ஆயத்தங்கள் நடந்து வருகிறது.

    போர் ஆயத்தம் என்ன

    போர் ஆயத்தம் என்ன

    இந்த தென் சீனா கடல் பகுதியை மொத்தமாக கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு தடையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு உதவி செய்து, சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் அங்கு போர் கப்பலைகளை குவித்து வருகிறது. அமெரிக்கவிற்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. இதனால் சீனாவை சுற்றி அனைத்து எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது.

    English summary
    After US, China's fight in Everest may lead to a bigger conflict with India - Here is Why?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X