12 ரயில்கள் தீக்கிரை! 234 ரயில்கள் ரத்து! அக்னிபாத் போராட்டத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு
டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 12 ரயில்களுக்கு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசின் அக்னிபாத் எனும் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டம் தென்னிந்தியாவுக்கும் பரவியுள்ளது. தென்னிந்தியாவில் தெலுங்கானாவில் இந்த போராட்டம் வெடித்துள்ளது. தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனிடையே நாடு முழுவதும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டத்தால் 200 ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில் சேவைகள் இடையே நிறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு ரயில்வே நிர்வாகமானது ஹவுரா- புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ்; ஹவுரா- லால்குவான் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி-பாட்னா பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ்; தனாபூர்- டாடா எக்ஸ்பிரஸ், ஹவுராவ்- தன்பாத் பிளாக் டைமண்ட் எக்ஸ்பிரஸ்; அசன்சோல்- டாடா எக்ஸ்பிரஸ்; ஜெயநகர்- ஹவுரா எக்ஸ்பிரஸ், மால்டா டவுன் - கியூல் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் சேதம், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நாடு தழுவிய போராட்டங்களால் மொத்தம் 340 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை துவங்கிய போராட்டம் முதல் இன்று வரை மொத்தம் 12 ரயில்கள் தீக்கிரையாகி உள்ளன. அதோடு 94 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 140 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 65 மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் 30 பயணிகள் ரயில்கள் பாதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கிழக்கு மத்திய ரயில்வேயில் 164 ரயில்கள், வடகிழக்கு ரயில்வேயில் 34, வடக்கு ரயில்வேயில் 13 மற்றும் வடகிழக்கு எல்லையோர ரயில்வேயில் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‛‛அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடப்பதாலும், தீவைப்பு நிகழ்வுகள் நடப்பதாலும் பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்டுகின்றன' ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications