டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடம்பெல்லாம் புளூ கலரா மாறிடுச்சு.. 5 நிமிஷம்தான் கட் பண்ணேன்.. பகீரை கிளப்பிய ஆஸ்பத்திரி ஓனர் ஆடியோ

ஆக்ரா மருத்துவமனை ஓனரின் ஆடியோ அதிர்ச்சியை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: "ஒருபக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை.. இன்னொரு பக்கம் நோயாளிகளை வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லியும் யாருமே வரவில்லை.. அதனால் நான் ஒரு ஐடியா பண்ணேன்.. ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் செத்து போவங்க.. யாரெல்லாம் பிழைப்பாங்கன்னு யோசிச்சேன்.. அதனால, 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினேன்.. திடீர்னு 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற ஆரம்பிச்சிடுச்சு.. அவங்க உடம்பெல்லாம் புளூ கலரா மாறிடுச்சு.." என்று ஒரு ஆஸ்பத்திரி ஓனர் பேசும் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முறை 2வது பரவல் ஆரம்பித்ததில் இருந்தே, ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்து ஆரம்பித்துவிட்டது.. அதிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது...

இது தொடர்பாக செய்திகள் வீடியோ வெளிவந்தும், உபி முதல்வர் மறுத்தார்.. யாராவது ஆக்சிஜன் இல்லைன்னு பொய் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று வார்ன் செய்தார்... ஆனால், அலகாபாத் ஹைகோர்ட் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக உபி அரசை கடுமையாக சாடியதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

 ஆஸ்பத்திரி ஓனர்

ஆஸ்பத்திரி ஓனர்

இப்படிப்பட்ட சூழலில்தான், ஆக்ராவில் ஒரு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் ஆடியோவாக வெளிவந்து தூக்க வாரி போட்டுள்ளது.. அந்த ஆஸ்பத்திரி ஓனர் ஆடியோவில் பேசியவதாது: "சொல்ல முடியாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது... நோயாளிகளை கூட்டிட்டு போய்டுங்க என்று மக்களை கேட்டுக்கொண்டோம்.. ஆனால், யாருமே வந்து கூட்டிட்டு போகல. அதனால், நானே ஒரு ஐடியா செய்தேன்..

 மூச்சு திணறல்

மூச்சு திணறல்

ஆக்சிஜன் இல்லாவிட்டால் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள்.. யாரெல்லாம் பிழைப்பார்கள் என்று டெஸ்ட் செய்ய முடிவெடுததேன்.. அதனால், ஏப்ரல் 26-ம்தேதி காலை 7 மணிக்கு 5 நிமிஷம் ஆக்சிஜன் சப்ளையை கட் பண்ணினோம்... இதை பற்றி யாருக்குமே வெளியில் தெரியாது.. உடனே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணற தொடங்கியது.. அவங்க உடம்பெல்லாம் நீல நிறமாக மாற ஆரம்பித்தது.. இதை பார்த்ததும், எப்படியோ பிழைக்க மாட்டாங்கன்னு முடிவு செய்தோம்..

சிலிண்டர்கள்

சிலிண்டர்கள்


ஐசியூ வார்டில் உயிர் பிழைத்த 70 பேரையும், அவங்களையே சொந்தமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு வருமாறும் சொன்னோம்" என்று அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பற்றி அந்த ஆஸ்பத்திரி ஓனர் ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசும்போது சொன்னதாவது:

பேட்டி

பேட்டி

"அந்த ஆடியோவில் பேசியது நான்தான்.. அதை மறுக்கவில்லை.. ஆனால் நான் பேசியது தப்பாக திரிக்கப்பட்டுள்ளது.. அபாயத்தில் உள்ள நோயாளிகள் யார் என்று கண்டறிந்து அவங்களை பிழைக்க வைக்கவே, நாங்க இப்படி ஒரு போலியான டெஸ்ட் மேற்கொண்டோம்... 4 நோயாளிகள் ஏப்ரல் 26-ம்தேதியும், 3 பேர் ஏப்ரல் 27-ம்தியும் இறந்துவிட்டனர்..

 நடவடிக்கை

நடவடிக்கை

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மொத்தம் 22 பேர் இறந்துவிட்டார்களா என்று உறுதியாக தெரியவில்லை' என்கிறார். இந்த விவகாரம் உபியில் வெடித்து கிளம்பி உள்ளது.. இது சம்பந்தமாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட், விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்..

English summary
Agra mock drill paras hospital oxygen supply ICU patients
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X