உலகை ஆளும் "AI.." ரயில் பயணிகளின் டேட்டா விற்பனையால் என்ன நடக்கும் தெரியுமா?
டெல்லி: சில நாட்களுக்கு முன்னர் ரயில்வே துறை பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் பரவியது. ஏன் இவ்வாறு பயணிகளின் தரவுகள் விற்கப்படுகின்றன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடப்பட்ட நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முறையாக பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான வரவு செலவுகள் வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தனியாருக்கு ரயிலை இயக்கும் ஒப்பந்தம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது பயணிகளின் தரவுகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி பட்ஜெட்
இந்தியாவில் 1924 முதல் ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடப்பட்டு வந்தது. ஆனால், ஏறத்தாழ 94 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2017ம் ஆண்டு பாஜக அரசு ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே துறைக்கான வரவு செலவுகள் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. சூழல் இவ்வாறு இருக்க தொடர்ச்சியாக ரயில்களை இயக்கும் பொறுப்புகளை தனியாருக்கு கைமாற்றியது மத்திய அரசு.

விற்பனை
இதன் தொடர்ச்சியாக பயணிகளின் தரவுகள் தனியாருக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வணிக நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரூ.1,000 கோடி வரை நிதி திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்தாலும் டெண்டர் விடப்பட்டதற்கான ஆவணங்கள் ரயில்வே துறை வெப்சைட்டில் காணக்கிடைக்கிறது.

AI தொழில்நுட்பம்
இவ்வாறு தரவுகளை விற்பனை செய்வதன் மூலம் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும், அதேபோல தங்கள் நிறுவனங்கள் சார்ந்த விளம்பரங்களை கொண்டு சேர்க்கவும் இந்த தரவுகளை பயன்படுத்தும். மட்டுமல்லாது, உலகின் செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் மேக்கிங் கேபிட்டலாக இந்தியாவை நிலைநிறுத்துவது இதன் நோக்கமாகத் தெரிகிறது. ஆனால் இவ்வாறு தரவுகளை விற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.

மசோதா
உதராணமாக கடந்த 2019ல் டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தனிநபர் தரவு பாதுகாப்பு (PDP) மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மசோதாவில் இடம்பெற்ற விசயங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும் இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

அனைத்தும்
இந்த மசோதாக தனிநபர் தகவல்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திரும்பப்பெறப்பட்ட மசோதா திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால் ரயில்வே துறையின் இந்த விற்பனை நடவடிக்கை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படும். இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த விற்பனை திட்டம் மூலம் IRCTC-யிடம் உள்ள பயனாளிகளின் வயது, செல்போன் எண்கள், பாலினம், முகவரி, மின்னஞ்சல் ஐடிகள், உள்நுழைவு ஐடிகள் மற்றும் கடவுச்சொற்கள் ஆகியவை தனியாருக்கு விற்கப்படும்.

விளக்கம்
இவ்வளவு சர்ச்சைக்குரிய நடவடிக்கை குறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ள பதிலானது திருப்திகரமானதாக இல்லையென அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதாவது, உலகம் முழுவதும் தரவுகளைக் கையாளும் வணிகங்கள் ஒரு தெளிவற்ற மண்டலத்தில் (fuzzy zone) செயல்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடங்கி மக்கள் பயன்படுத்தும் கூகுள் க்ரோம் வரை தனிநபர் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. எனவே மக்கள் அதனை புறக்கணிக்கிறார்களா? எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

உலகின் அடுத்த கட்டம்
அதேபோல இந்த தரவுகளை விற்பனை செய்வதன் மூலம் தரவுகளை பெறும் நிறுவனங்களை தரவு பட்டியலில் உள்ள மக்கள் அணுகும்போது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்குமான தொடர்பு எளிதாக்கப்படும். இது முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் உலகின் அடுத்த கட்ட நகர்வுகளாகும் என சொல்லப்படுகிறது. என்னதான் இவ்வாறு சொல்லப்பட்டாலும், தனிநபரின் முதன்மை தரவுகள் விற்பனை செய்யப்படுவதை பல்வேறு தரப்பினரும் எதிர்க்கின்றனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications