டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மாதங்களில் கொரோனா 3வது அலைக்கு சான்ஸ்.. டெல்லி எய்ம்ஸ்சில் குழந்தைகளுக்கு வாக்சின் டிரையல் ஆரம்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக, சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்த நிலையில், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனைகள் இந்தியாவில் துரிதமாக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    குழந்தைகளை குறி வைக்கும் மூன்றாவது அலை | Dr. Deepa chat part-02 | Oneindia Tamil

    பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் முதலில் இந்த சோதநைகளை ஆரம்பித்தது.

    இப்போது இப்போது டெல்லியிலுள்ள புகழ் பெற்ற எய்ம்ஸ் பாரத் பயோடெக்கின் கோவிட் -19 தடுப்பூசி "கோவாக்சின்" மருத்துவ பரிசோதனைகளை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

    பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது! பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது!

    பாட்னா எய்ம்ஸ்

    பாட்னா எய்ம்ஸ்

    மே 11 ஆம் தேதி குழந்தை மருத்துவ ஆய்வுகளைத் தொடங்க பாரத் பயோடெக் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ்-பாட்னா ஏற்கனவே கோவாக்சினின் குழந்தைகளுக்கான பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

    12 முதல் 18 வயது குழந்தைகள்

    12 முதல் 18 வயது குழந்தைகள்

    எய்ம்ஸ் பாட்னாவில், 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது, ​​எய்ட்ஸ் டெல்லி 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி பாதுகாப்பானதா என சோதிக்க உள்ளது.

    டிசிஜிஐ ஒப்புதல்

    டிசிஜிஐ ஒப்புதல்

    முன்னதாக, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் கூறியதாவது, "2 முதல் 18 வயதுக்குட்பட்ட இரண்டாம் நிலை / மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு கோவாக்சின் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது." என்றார்.

    இந்தியாவில் 3வது கொரோனா அலை

    இந்தியாவில் 3வது கொரோனா அலை

    கோவிட் -19 இன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று இந்தியாவின் தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 3வது அலை துவங்க வாய்ப்பு உள்ளது என்று என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார். எனவே மேலும் மேலும் கூடுதலாக மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று, அவர் கூறினார்.

    பரிசோதனைகள்

    பரிசோதனைகள்

    2 வயது முதல் 18 வயதுக்கு இடையேயான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் இன்று காலை துவங்கியுள்ளன. முதலில் குழந்தைகள் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகுதான் தடுப்பூசி செலுத்தப்படும். 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும். 525 தன்னார்வல குழந்தைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    English summary
    After warning from experts about the potential third Covid wave which is more likely to affect children, vaccine trials on children have begun in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X