உயிரை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கிய ஏர் ஆம்புலன்ஸ்! 7 பேருக்கு நேர்ந்த சோகம்!
டெல்லி: ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா அருகே, நேற்று மாலை நடந்த ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்தில், நோயாளி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.
Redbird Airways Pvt Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் C90 (VT-AJV) ரக விமானம், ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 7.11 மணிக்கு கிளம்பியது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்தது. சத்ரா துணை ஆணையர் கீர்த்திஸ்ரீ ஜி, "ஏர் ஆம்புலன்ஸில் இருந்த ஏழு பேரும் விபத்தில் உயிரிழந்தனர். விமானம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது," என்று தெரிவித்தார்.

சுமார் 7.30 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. சிமரியாவில் உள்ள பரியாது பஞ்சாயத்து பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கீர்த்திஸ்ரீ ஜி மேலும் தெரிவித்தார். விமானத்தில் இருந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக சத்ரா மாவட்டத்தின் எஸ்பிடிஓ சுபம் கந்தேல்வால், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள்: கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார்.
விபத்துக்குள்ளான இந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானப் பயணம், சஞ்சய் குமார் என்ற நோயாளிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் சின்ஹா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "லேதேஹர் மாவட்டத்தின் சந்த்வா பகுதியைச் சேர்ந்த 41 வயதான சஞ்சய் குமார், பிப்ரவரி 16 ஆம் தேதி 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது."
டெல்லியில் சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக சஞ்சய் குமாரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, திங்கட்கிழமை ஒரு ஏர் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நோயாளி அன்று மாலை 4:30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டெல்லிக்கு கிளம்பினார் என்று சின்ஹா தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சம்பாய் சோரன், இந்த விபத்துச் செய்தி கேட்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அவர் தனது X தளத்தில், "விபத்தில் விமானப் பணியாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, ராஞ்சி விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் கூறுகையில், விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக தெரிவித்தார். "மோசமான வானிலை இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் உண்மையான காரணம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்" என்றும் அவர் விளக்கமளித்தார்.
டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையின்படி, "நேற்று Redbird Airways Pvt Ltd நிறுவனத்தின் பீச்கிராஃப்ட் C90 (VT-AJV) ரக விமானம், ராஞ்சி-டெல்லி வழித்தடத்தில் மருத்துவ மீட்பு (ஏர் ஆம்புலன்ஸ்) விமானமாக இயக்கப்பட்டது. இது ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள காசாரிய பஞ்சாயத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இரண்டு விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் இருந்தனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விமானம் இரவு 7:11 மணிக்கு ராஞ்சியில் இருந்து கிளம்பியது. இரவு 7:34 மணிக்கு கொல்கத்தா கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பிறகு, வாரணாசிக்கு தென்கிழக்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், கொல்கத்தா மற்றும் ரேடார் தொடர்பை இழந்தது," என்றும் டிஜிசிஏ அறிக்கை தெரிவிக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications