டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூச்சுத்திணறும் டெல்லி.. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.. கட்டுமான பணிகளுக்கு தடை!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் தற்போது காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி இருக்கும்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

பஞ்சாப் மற்றும் அரியானா

பஞ்சாப் மற்றும் அரியானா

டெல்லிக்கு அருகில் உள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு மிகக் கடுமையாக அதிகரிக்கிறது. குறிப்பாக டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசுகளை வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தடையை மீறி சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இது ஒருபுறம் இருக்க கட்டிடங்களை இடிக்கவும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

காற்று மாசு அதிகரிப்பு

காற்று மாசு அதிகரிப்பு

இப்படி எத்தனையோ நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்தாலும் காற்று மாசு அதிகரிப்பது குறைந்த பாடில்லை. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. நடப்பு சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. அதாவது காற்று மாசு 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

 தீபாவளி தினத்தன்று..

தீபாவளி தினத்தன்று..

அரசின் தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்த காற்று மாசு 48 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது. டெல்லியில் 24 மணி நேரத்தில் சராசரியாக காற்றின் தரம் குறித்த குறியீட்டில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 394 ஆக இருந்தது. கடந்த வியாழக்கிழமை 354 ஆகவும் புதன் கிழமை 271 ஆகவும் செவ்வாய்க்கிழமை 302 ஆகவும் தீபாவளி தினத்தன்று 312- ஆகவும் காற்றின் தரம் இருந்தது.

கட்டுமான பணிகளுக்கு தடை

கட்டுமான பணிகளுக்கு தடை

தற்போது காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்டும் திட்டம் பாதிக்கப்படும் எனத்தெரிகிறது. வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் டெல்லியில் காற்று மாசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் கட்டுமானங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற அவசர கூட்டத்தில் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்தனர்.

English summary
Air pollution has increased to an unprecedented level in the national capital Delhi. Due to this, construction work has been banned there in order to control the air pollution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X