டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரதட்சணை கொடுக்கும் திருமணங்களை உலமாக்கள் புறக்கணிப்பார்கள்.. முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: வரதட்சணை கேட்டு நடைபெறும் திருமணங்களில் உலமாக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காக முதல்கட்டமாக, மகாராஷ்டிரா , தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சாரங்களை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கையில் எடுத்துள்ளது.

All India Muslim personal law board tweets against dowry

வரதட்சனை கொடுமை காரணமாக சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற இளம்பெண் சபர்மதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டு உறவினர்களை கைது செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து தான் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஓராண்டு....மறக்கத்தான் முடியுமா அந்த 'மக்கள் ஊரடங்கு' நாளை.. அதுவும் மாலையில் நடந்த கூத்துகளை!ஓராண்டு....மறக்கத்தான் முடியுமா அந்த 'மக்கள் ஊரடங்கு' நாளை.. அதுவும் மாலையில் நடந்த கூத்துகளை!

இதுபற்றி தங்கள் ட்விட்டர் பதிவில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தரப்பு நீண்ட விளக்கம் அளித்துள்ளது. அதில், முஸ்லிம் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற வேண்டும், அதன் நடைமுறைகள் எளிமையாக்க படவேண்டும், குறிப்பாக வரதட்சணை கேட்பது, பெண் குழந்தைகளின் குடும்பத்தாருக்கு அழுத்தம் கொடுத்து பணம் கேட்பது உள்ளிட்டவற்றை ஏற்க முடியாது.

எனவே, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை ஆரம்பிக்கிறோம். பிற மாநிலங்களிலும் விரைவில் இந்த விழிப்புணர்வு அதிகரிக்கப்படும் .

கட்டாயப்படுத்தி வரதட்சணை கேட்டு நடைபெறும் திருமணங்களில் உலமாக்கள் மற்றும் குவாசிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
All India Muslim personal law board announced that Ulama and Qazis will not attend such marriages where there will be forced detailing of dowry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X