அதானி விஷயம்.. மத்திய அரசு மறுக்கவேயில்லை கவனித்தீர்களா? அப்போ உண்மைதான்- லோக்சபாவில் ஆ.ராசா விளாசல்
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு இதுவரை மறுக்கவில்லை என்று திமுக எம்.பி ஆ.ராசா மக்களவையில் பேசினார்
டெல்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து அவையை முடக்கி வருகிறது.
நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கடந்த மாதம் 31-ந் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசு தலைவராக திரவுபுதி முர்மு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவேயாகும். குடியரசு தலைவர் தனது உரையில் நாட்டின் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்கால கனவு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
தற்போது குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கேள்வி எழுப்பி கடும் அமளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

ஆர் ராசா விமர்சனம்
குறிப்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து அவையை முடக்கி வருகிறது. இந்த நிலையில், மக்களவையில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆ.ராசா பேசியதாவது: அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு இதுவரை மறுக்கவில்லை. மத்திய அரசு மறுக்கவில்லை என்பதால் எதிர்கட்சிகள் வைக்கும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவில்லை என்பதால் அது உண்மை என்றே தோன்றுகிறது.

திருப்தி அளிக்கவில்லை
140 கோடி மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் உங்களுக்கு(மத்திய அரசு) இருப்பதாக கூறி வருகிறீர்கள். ஆனால், 200 க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உங்களிடம் இல்லாத போது எந்த அடிப்படையில் நீங்கள் இவ்வாறு கூற முடியும். மத்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை நிதி அமைச்சர் புறக்கணித்துவிட்டார்" என்றார்.

குறைந்த அளவே நிதி
தொடர்ந்து திமுக எம்பி ஆ ராசா கூறுகையில், "பழங்குடியின மக்களுக்கு புதிய பள்ளிகள் அமைப்பது தொடர்பாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. பின் தங்கிய வகுப்புகளுக்கும் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள்தான் செழிப்படைகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறையும்" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications