டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹமாஸ் தாக்குதலில் இந்திய நர்ஸ் பலி.. குடும்பத்தை தொடர்பு கொண்ட இஸ்ரேல் தூதர்! 9 வயது மகன் பற்றி கவலை

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்ரேலில் பணியாற்றிய கேரள செவிலியர், ஹமாஸ் தாக்குதலில் பலியானதற்கு, இஸ்ரேல் தூதர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Israel-ல் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் Kerala-வை சேர்ந்த நர்ஸ் பலி

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே புதன்கிழமை அதிகாலை முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

    இரு தரப்பும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

    இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் கேரளா நர்ஸ் பலி.. கணவருடன் வீடியோ காலில் பேசும் போது சோகம்! இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் கேரளா நர்ஸ் பலி.. கணவருடன் வீடியோ காலில் பேசும் போது சோகம்!

    கேரள நர்ஸ்

    கேரள நர்ஸ்

    இதனிடையே காஸா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கட்டடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அலிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன. இதில் பேருந்து, வாகனங்கள், கட்டடங்கள் தீயில் கருகின. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்தனர். அதில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்த 31 வயது சவுமியா ஒருவர்.

    வீடியோ கால்

    வீடியோ கால்

    செவிலியரான இவர் இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு அஷ்கிலான் நகரில் தனது வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவிய ராக்கெட், சவுமியாவின் வீட்டின் மீது விழுந்ததில் சவுமியாவின் அலறல் சப்தம் கேட்டது. இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, அஷ்கிலான் நகரில் உள்ள சவுமியாமின் உறவினர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது சவுமியா உயிரிழந்து கிடந்தார்.

    வருத்தம் தெரிவித்தேன்

    இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், ரோன் மல்கா இன்று அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட சவுமியா சந்தோஷின் குடும்பத்தினருடன் நான் பேசினேன். அவர்களின் துரதிர்ஷ்டவசமான இழப்புக்கு எனது வருத்தத்தை தெரிவிக்கிறேன். இஸ்ரேல் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்தேன். அவரது இழப்புக்கு முழு நாடும் இரங்கல் தெரிவிக்கிறது. அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.

    சிறுவன் நிலைமை

    சிறுவன் நிலைமை

    சவுமியாவின் 9 வயது மகன் அடோன் நிலைமை குறித்து, எங்கள் மனது கவலைப்படுகிறது. இந்த சிறு வயதில் அவர் தனது தாயை இழந்துள்ளார். தாய் இல்லாமல் வளர வேண்டிய நிலை அந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்த மோசஸை இந்த மோசமான தாக்குதல் நினைவு கூர்கிறது. கடவுள் அந்த சிறுவனுக்கு உரிய பலம் மற்றும் தைரியம் கொடுக்கட்டும். இவ்வாறு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா தெரிவித்துள்ளார்.

    English summary
    I just spoke to the family of Soumya Santosh, victim of Hamas terrorist strike. I expressed my sorrow for their unfortunate loss & extended my condolences on behalf of Israel. The whole country is mourning her loss & we are here for them says, Ambassador of Israel to India, Ron Malka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X