டெல்லி எய்ம்ஸ்...கொரோனா வார்டில் மீண்டும் அமித் ஷா...தீவிர சிகிச்சை!!
டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமைதான் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று வந்திருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து 14 நாட்களுக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார்.
Recommended Video
இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு (நேற்று) மீண்டும் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனை மருத்துவர் குழு தற்போது தொடர்ந்து அமித் ஷாவின் உடலை பரிசோதித்தும், கண்காணித்தும் வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தலைமையில் மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

கொரோனா சிகிச்சைக்காக டெல்லி, குர்காவனில் இருக்கும் மேதாந்தா மருத்துவமனையில் இந்த மாத துவக்கத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இவருக்கு நெகடிவ் என்று பரிசோதனையில் தெரிய வந்த பின்னர், வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தார். வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மருத்துவமனை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த 3-4 நாட்களாக தலைச்சுற்றல், உடல் வலி இருந்ததாக தெரிவித்து இருந்தார். சமீபத்தில்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இருந்த இவர், நெகடிவ் என்ற ரிசல்ட் கிடைத்து இருந்தது. தற்போது கொரோனா வார்டில் சேர்க்கபட்டு இருக்கிறார். நலமாக இருக்கிறார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது பணிகளை கவனிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications