டிராக்டர் பேரணி- படுகாயமடைந்த போலீசாரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் அமித்ஷா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர்கள் பேரணியின் போது ஏற்பட்ட மோதல்களில் படுகாயமடைந்த போலீசாரை உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

டெல்லி சுஷ்ருதா மருத்துவ மையம், தீரத்ராம் மருத்துவமனைக்கு சென்ற அமித் ஷா, அங்கு சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து, அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இது தொடர்பாக அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
டெல்லி காவல் துறையின் தீரமிகு காவலர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன்.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் அவர்கள் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது.
இவ்வாறு அமித்ஷா பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications