அடிமடியில் கை வைத்த டிரம்ப்! இந்தியாவில் Gen-Z கிளர்ச்சிக்கு அச்சாரம் போடும் அமெரிக்கா? ஆபத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால், இந்தியாவில் Gen-Z கிளர்ச்சி ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. குறிப்பாக ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும். இது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி கிளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது விலைவாசியையும் பாதிக்கும். இது இலங்கை, வங்கதேசத்தில் ஏற்பட்டத்தை போல இங்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

oil Russia fuel

இந்தியாவுக்கு வெடி வைக்கும் அமெரிக்கா

இந்தியாவுக்கு மலிவு விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை கிடைக்க விடாமல் செய்வதே அமெரிக்காவின் வேலையாக இருக்கிறது. முன்னதாக நாம் ஈரானிடம் எண்ணெய் வாங்கி வந்தோம். ஆனால், ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா அறிவிக்க, நாம் எண்ணெய் கொள்முதலை நிறுத்தி விட்டோம். இப்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய்யை வாங்கி வந்தோம். இந்த வர்த்தகத்திற்கும் அமெரிக்கா வெடி வைத்துவிட்டது.

ரஷ்ய எண்ணெய்யும் கிளர்ச்சியும்

அதாவது ரஷ்யா எண்ணெய்யை வாங்குகிறீர்கள் என்று நம் மீது அமெரிக்கா வரியை போட்டுள்ளது. எனவே இந்தியாவுக்கு ரஷ்யா எண்ணெய்யை தவிர்ப்பதை தவிர வேறு வழியில்லை. நம்முடைய எண்ணெய் தேவையில் 3ல் 1 பங்கை ரஷ்ய எண்ணெய்தான் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்ததன் மூலம், ரிலையன்ஸ் போன்ற இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் $12.6 பில்லியனை (இந்திய மதிப்பில் ரூ.1.10 லட்சம் கோடி) மிச்சம் பிடித்திருக்கின்றன. ரஷ்யாவும் நம்மிடம் எண்ணெய் விற்பதன் மூலம் நல்ல லாபம் பார்க்கிறது.

2 எண்ணெய் நிறுவனங்களுக்கு குறி

இந்நிலையில் ரோஸ்னெஃப்ட் மற்றும் லிகோயில் என்கிற 2 ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 5% அளவை கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களிலிருந்துதான் நாம் 60% எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். நவ.21ம் தேதிக்குள் இந்த நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை எனில், எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.

மாற்று சப்ளையரும் விலை உயர்வும்

எனவே இந்தியா மாற்று சப்ளையரை தேடி வருகிறது. இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. முதல் விஷயம், தடையற்ற எண்ணெய் சப்ளைதான். மேற்குறிப்பிட்ட இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் நாளொன்றுக்கு 12 லட்சம் பீப்பாய் எண்ணெய்களை இந்தியாவுக்கு விற்கின்றன. இந்தியாவில் உள்ள வாகனங்கள் ஓட வேண்டும் எனில் அதற்கு பெட்ரோல், டீசல் அவசியம். அந்த வகையில், 52 லட்சம் பீப்பாய்கள் இருந்தால் இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையை ஒரு நாளைக்கு பூர்த்தி செய்துக்கொள்ளலாம். அந்த வகையில், 12 லட்சம் பீப்பாய்கள் என்பது இந்தியாவின் ஒருநாள் எரிபொருள் தேவையில் 23% சதவிகிதமாகும்.

23% என்பது குறைவான அளவாக தெரியலாம். ஆனால், இது தடையில்லாமல் கிடைக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம். ஒருவேளை இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனில், இந்தியா நிச்சயம் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை எதிர்கொள்ளும். அரபு நாடுகள் இந்த அளவுக்கு எண்ணெய்யை தடையில்லாமல் கொடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இரண்டாவது சிக்கல் குறைவான விலையை விட கூடுதல் விலைக்கு இந்த கச்சா எண்ணெய் கிடைத்தாலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என்பதுதான். இதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் 2-5% வரை தள்ளுபடியில் நமக்கு எண்ணெய்யை விற்கின்றன. அதாவது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 85 டாலருக்கு விற்கப்படுகிறது எனில், ரஷ்ய நிறுவனங்கள் 81 டாலருக்கு எண்ணெய்யை விற்கின்றன. இப்படி இருக்கும்போது டிரம்புக்கு பயந்து, அரபு நாடுகள் பக்கம் போனால், 85 டாலருக்குதான் எண்ணெய் வாங்க வேண்டி வரும். அதேபோல, ரஷ்யாவை விட்டு விட்டு சவுதி பக்கம் நாம் போகும்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும். இதனால் சாதாரணமாகவே விலை அதிகாரிக்கும்.

இப்படி அதிகரித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும். இலங்கையிலும், வங்கதேசத்திலும் Gen-Z இளைஞர்கள் நடத்திய கிளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று எரிபொருள் விலை உயர்வுதான்.

இந்தியாவில் தற்போது வேலையில்லா பிரச்சனை, வேலை இருந்தாலும் அது அடிமாட்டு கூலி கிடைப்பது, கல்விக்கான செலவு, சுகதாரத்திற்கு செலவு என அனைத்தும் மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்தால் அது சங்கிலி தொடர் போல அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரிக்கும். எனவே, இந்தியாவிலும் Gen-Z கிளர்ச்சி ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+