டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போன மாசம் வாக்குறுதி கொடுத்தார்.. இந்த மாசம் நிறைவேற்றிட்டார்.. ஆனந்த் மகிந்திராவுக்கு பாராட்டுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: பழைய உலோகத்தை பயன்படுத்தி நான்கு சக்கர வாகனம் தயாரித்த மகாராஷ்டிரா நபருக்கு ஆனந்த் மகிந்திரா வாக்குறுதி அளித்தபடி புதிய பொலிரோ காரை வழங்கினார். அதற்கு பதிலாக அந்த நபர் வடிவமைத்த வாகனத்தை பெற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் தத்தாத்ராய லோகர். இவரது மகன் கார் வேண்டும் என இவரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு போதிய வசதி இல்லாததால் சொந்தமாக ஒரு காரை வடிவமைக்கும் எண்ணம் லோகருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து தனது வீட்டிலிருந்த பழைய உலோகங்கள், துணி, கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தி ஒரு வாகனத்தை தயாரித்துள்ளார். இதை தயாரிக்க அவர் ரூ 60 ஆயிரம் செலவு செய்துள்ளார். இது குறித்த செய்தி இணையத்தில் வைரலானது.

புதிய கோணம்.. 2020ல் வளர்ப்பு தாய்க்கு எதிராக புகார் கொடுத்தாரா அரியலூர் மாணவி? போலீஸ் விசாரணை புதிய கோணம்.. 2020ல் வளர்ப்பு தாய்க்கு எதிராக புகார் கொடுத்தாரா அரியலூர் மாணவி? போலீஸ் விசாரணை

ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

இதை அறிந்த மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, தத்தாத்ராய லோகரை பாராட்டினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்த காரை உருவாக்கியவர் தெளிவான விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் உருவாக்கியிருக்கலாம். ஆனால் நம் மக்களின் புத்தி கூர்மை மற்றும் திறமைகளை பாராட்டுவதை நான் ஒரு போதும் நிறுத்திக் கொள்ள மாட்டேன் என்றார்.

பொலிரோ கார்

பொலிரோ கார்

இதையடுத்து அவர் மீண்டும் மற்றொரு ட்விட்டர் பதிவில் கூறுகையில், தத்தாத்ராய லோகர் உருவாக்கிய வாகனம் ஓட்டுவதற்கான விதிமுறைகளை மீறுவதால் உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த வாகனத்தை தடை செய்வார்கள். நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு பொலிரோ காரை வழங்குகிறேன். அவரது கண்டுபிடிப்பு மகிந்திரா ரிசர்ச் வேலியில் இடம் பெறும் என தெரிவித்திருந்தார்.

5 பேர் வரை அமரலாம்

5 பேர் வரை அமரலாம்

லோகர் கண்டுபிடித்த வாகனம் கால்களால் உதைத்து ஸ்டார்ட் செய்ய வேண்டும். இதில் முன் பக்கத்தில் டிரைவருடன் சேர்த்து இருவர் அமரலாம். பின்புறத்தில் 3 பேர் வரை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி அன்று லோகருக்கு பொலிரோ கொடுப்பதாக வாக்குறுதி அளித்த ஆனந்த் மகிந்திரா தான் சொன்ன வாக்குறுதியை நேற்றைய தினம் காப்பாற்றிவிட்டார்.

புதிய கார்

புதிய கார்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், லோகர் கண்டுபிடித்த வாகனத்திற்கு பதிலாக புதிய பொலிரோ வாகனத்தை அவர் பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். 24 ஆம் தேதி பொலிரோ காரை அவரது குடும்பத்தினருடன் வந்து பெற்றுக் கொண்டார். நாங்களும் அவரது படைப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம்.

Recommended Video

    Car வாங்க சென்ற விவசாயி! நக்கல் செய்த Salesman ! செம்ம Twist| Oneindia Tamil
    பாராட்டு

    பாராட்டு

    அவரது படைப்பு அனைத்து விதமான கார்கள் இடம்பெற்றுள்ள இடத்தில் வைக்கப்படும். இது பார்த்து புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஊக்கம் நம்மிடையே ஏற்படும் என்றார். சொன்ன சொல்லை காப்பாற்றியதற்காக ஆனந்த் மகிந்திராவை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    Industrialist Anand Mahindra has kept his promise to Maharastra man after giving New Bolero car to him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X