‛எமர்ஜென்சி’.. ரயில்வே அமைச்சருக்கு போன் போட்ட பிரதமர் மோடி..ஆந்திர ரயில் விபத்தால் பறந்த அறிவுரை
டெல்லி: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பிரதமர் மோடி அவசரமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு போன் போட்டு விபரங்களை கேட்டறிந்த நிலையில் அறிவுரைகளை வழங்கினார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி அருகே சென்றது.

அப்போது திடீரென்று பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி இன்னொரு பயணிகள் ரயில் வந்தது.
இந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
சுமார் 18க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரயில் விபத்து நடந்து பலி எண்ணிக்கை உயர தொடங்கியவுடன் பிரதமர் மோடி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு போன் போட்டு பேசினார்.

அப்போது ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அவர் கேட்டறிந்தார். அஸ்வினி வைஷ்ணவ் விபத்து பற்றி கூறிய நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினார். அலமண்டா மற்றும் கண்டகபள்ளி பிரிவுக்கு இடையே ரயில் தடம்புரண்ட விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக அவர் பிரார்த்திக்கிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications