Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிட்நைட் 1-3.." திடீர் திடீர்னு விழிப்பு வருதா! இந்த பிரச்னையாக இருக்கலாம்! உடனே டாக்டர்கிட்ட போங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரவு எவ்வளவு களைப்பாகத் தூங்கினாலும் கூட திடீரென நள்ளிரவு நேரத்தில் விழிப்பு வருகிறதா? உங்களுக்கு ஒரு வகை நோய் இருக்கலாம்.

இரவு நேரத்தில் தூங்கும் போது நள்ளிரவில் எழுந்திருப்பது சாதாரணமானது தான். பொதுவாகக் கழிப்பறையைப் பயன்படுத்த அல்லது தாகம் காரணமாக இதுபோல இரவு தூக்கத்தில் இருந்து விழிப்பு ஏற்படக்கூடும். அல்லது கெட்ட கனவு காரணமாகவும் விழிப்பு வரும்.

எப்போதாவது இப்படி விழிப்பு வந்தால் பிரச்சினை இல்லை. அதேநேரம் தினமும் இதுபோல நடந்தால் நிச்சயம் நீங்கள் கவலை கொள்ளவே வேண்டும். ஒவ்வொரு நாளும் இதே நடந்தால் சில பாதிப்புகள் இருக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 தூக்கம் வரவில்லையா

தூக்கம் வரவில்லையா

நள்ளிரவில் எழுந்திருப்பது, அதிலும் குறிப்பாக அதிகாலை 1-3 மணிக்குள் எழுந்து, மீண்டும் தூங்க முடியாமல் போவது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். தூக்கம் இப்படிப் பாதிக்கப்படுவதற்கு மன அழுத்தம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அடிக்கடி காலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுவது என்பது தூக்கமின்மையை ஏற்படுத்தக் கூடும். இது உடலில் நீண்ட கால சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. மேலும், பல்வேறு நோய்களும் இது வழிவகுக்கிறது. அவற்றில் சில உயிருக்கே கூட ஆபத்தானவை.

 பலருக்கும் இதே பிரச்சினை

பலருக்கும் இதே பிரச்சினை

உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில் 10-20 சதவீதம் பேர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் வயதானவர்கள் மத்தியில் இது 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் ஸ்லீப் சைக்கிளும் கூட பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. பொதுவாக ஒரு இரவில் நம் உடல் பல ஸ்லீப் சைக்கிள் ஏற்படும். இந்த ஸ்லீப் சைக்கிளின்போது விழிப்பு ஏற்படுவது சரியானது தான் என்றாலும் பெரும்பாலும் நாம் மீண்டும் தூங்கச் சென்றுவிடுவோம்.

 ஸ்லீப் சைக்கிள்

ஸ்லீப் சைக்கிள்

பெரியவர்களுக்கு பொதுவாக 7 முதல் 9 மணிநேர தூக்கம் அத்தியாவசியம். இந்த நேரத்தில் இதுபோன்ற ஸ்லீப் சைக்கிள்கள் ஏற்படவே செய்யும். ஸ்லீப் சைக்கிள்கள் பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது. முதலில் விழிப்பு நிலையில் இருந்து மெதுவாகத் தூக்க நிலைக்குச் செல்வது. அடுத்து லேசான தூக்கம்.. பின்னர் ஆழ்ந்த தூக்கம். அதைத் தொடர்ந்து REM தூக்கம் ஏற்படும். நாம் ஒரு நாளை எப்படிச் செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்து இந்த தூக்க நிலைகள் மாறுபடும். நாம் அதிக வேலை செய்தால்.. இரவில் ஆழ்ந்த தூக்க நிலையில் அதிக நேரம் இருப்போம். காலை நெருங்கும்போது REM தூக்க நிலையில் அதிக நேரம் இருப்போம்.

 இன்சோம்னியா

இன்சோம்னியா

இரவு நேரத்தில் தூங்காமல் இருக்க இருப்பது இன்சோம்னியா என்று அழைக்கப்படும். இது சில உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். முதல் காரணம் மன அழுத்தம். தொடர்ந்து பல நாட்கள் உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உங்கள் உடல் உங்கள் நரம்பு மண்டலத்தைச் செயல்படுத்தும். இதனால் நீங்கள் நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்திருக்க நேரிடும். எழுந்திருப்பீர்கள். இது உங்கள் ரத்த அழுத்தத்தை திடீரென மாற்றி, இதயத் துடிப்பை அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் மற்றும் பதட்டம் தொடர்ந்து அதிகரித்தால், வேறு சில முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம்.

 வயதானால் ஏற்படும் பிரச்சினை

வயதானால் ஏற்படும் பிரச்சினை

வயதாவதும் கூட தூக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதாகும்போது நாம் எடுத்துக் கொள்ளும் ​​​​மருந்துகள் காரணமாக உங்கள் ஸ்லீப் சைக்கிள் பாதிக்கப்படும். இதனால் தூக்கத்தின் தரம் குறைவது மட்டுமின்றி, எழுந்திருக்கும் நேரம் மற்றும் தூங்கும் நேரங்களிலும் மாற்றம் ஏற்படும். மேலும், இது இரவு நேரங்களில் நம்மை பல முறை எழுந்திருக்க வைக்கும். மன அழுத்தம், கார்டிகோஸ்டீராய்டுகள், சளி மற்றும் இருமலுக்கு மருந்துகள் எனப் பல வகை மருந்துகளும் இரவில் நம்மை எழுந்திருக்க வைக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறல், இரைப்பை பிரச்சினை, கீல்வாதம், மனச்சோர்வு, நரம்பியல் பிரச்சினை, மெனோபாஸ், விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட், தைராய்டு பிரச்சினை ஆகியவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

 1-3 வரை விழிப்பு வருகிறதா

1-3 வரை விழிப்பு வருகிறதா

சரி விஷயத்திற்கு வருவோம். அதிகாலை ஒரு மணி முதல் 3 மணி வரை விழிப்பு வருவதற்கும் மீண்டும் தூங்க முடியாமல் போவதற்கும் என்ன காரணம். Rhoads to health என்ற தளத்தில் கூறப்பட்டுள்ள தரவுகளின்படி, குறிப்பிட்ட 1-3 மணி வரை என்பது உடல் கடிகாரத்தின் படி, கல்லீரல் உறுப்பு அமைப்புடன் ஒத்துப்போகிறது. நமது உடல் கடிகாரம், ஒவ்வொரு உறுப்பிற்கும் இரண்டு மணி நேரம் என ஒதுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நேரத்தில் குறிப்பிட்ட உறுப்புகள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவை வழக்கமான ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். மேலும், வேறு சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க இதுவே காரணம்.

கல்லீரல்

கல்லீரல்

பொதுவாக மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல் ஆகும்.. அதனால் தான் நாம் மன அழுத்தத்தையும், விரக்தியையும், பதட்டத்தையும் உணரும் போது கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. கூடவே தூக்கமின்மையைப் பிரச்சினையும் ஏற்படுகிறது. சில விஷயங்களைப் பின்பற்றி தூக்கமின்மையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம். தூங்கும் முன்பு சூடான நீரில் காலை கழுவலாம். மொபைல் போனை தள்ளி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கலாம்.

 அறை வெப்பம்

அறை வெப்பம்

அறை வெப்பமாகவும் இருக்கக் கூடாது.. ரொம்ப சில் என்றும் இருக்கக் கூடாது. தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுவதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையை ஓரளவுக்குச் சரி செய்ய முடியும். மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+