டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ரூட்' க்ளியர்.. உதவும் '15' நாடுகள் .. மீண்டெழுமா இந்தியா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு துரித கதியில் உதவ 15 நாடுகள் முன்வந்துள்ளன.

Recommended Video

    தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. America முதல் china வரை.. India-க்கு உதவும் உலக நாடுகள்

    கொரோனா இரண்டாவது அலை இந்திய நாட்டில் எதிர்பார்த்ததைவிட மிக உக்கிரமாக வீசி வருகிறது. பல்வேறு மாநிலங்களும் முழு லாக் டவுன் விதித்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றன.

    கொரோனா பரவல் குறையவில்லை... பரிசோதனைகளே குறைக்கப்பட்டுள்ளது... தேவேந்திர பட்னாவிஸ் தாக்குகொரோனா பரவல் குறையவில்லை... பரிசோதனைகளே குறைக்கப்பட்டுள்ளது... தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு

    ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தினமும் பலர் இறந்து வரும் நிலையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிணங்களை எரிக்கக் கூட இடமில்லாமல் தேசம் தடுமாறி வருவது கொடுமையின் உச்சம்.

     விரைவில் வந்து சேரும்

    விரைவில் வந்து சேரும்

    இந்த சூழலில், அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 15 நாடுகளில் இருந்து மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர், பிபிஇ கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் வந்து சேரும் என்று தெரிகிறது.

     ஆக்ஸிஜனுக்காக அல்லாடுகிறது

    ஆக்ஸிஜனுக்காக அல்லாடுகிறது

    திங்களன்று, இந்திய விமானப்படை சி -17 விமானம் துபாயில் இருந்து ஆறு கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கொள்கலன்களைக் கொண்டு வந்தது. அதேபோல், ஒரு ஜெர்மன் நிறுவனம் இந்த வார இறுதியில் மேலும் 24 கொள்கலன்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், மருந்துகள் மற்றும் பிபிஇ கருவிகளையும் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்பெர்ராவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட், "இந்தியா உண்மையில் ஆக்ஸிஜனுக்காக அல்லாடுகிறது" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

     அரசாங்கத்தால் அல்ல

    அரசாங்கத்தால் அல்ல

    எனினும், அரசு அதிகாரிகள் கொரோனா மருத்துவ உதவி கோருவதை தவிர்க்கின்றனர். வெளிநாட்டு உதவிகளை ஏற்காத இந்தியாவின் நீண்டகால கொள்கை இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்கொடை சலுகைகளில் பெரும்பாலானவை இந்திய செஞ்சிலுவை சங்கம் வழியாக பெறப்படுமே தவிர, அரசாங்கத்தால் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     சிறப்பான சப்போர்ட்

    சிறப்பான சப்போர்ட்

    சீனாவைப் பொறுத்தவரை, 'கேட்டால் உதவுவோம்' மோடில் உள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெபின் கூறுகையில், "இந்தியா தங்களுக்கு தேவையானவற்றை கோரிக்கைகளை எழுப்பினால், சிறந்த முறையில் உதவிகளையும், ஆதரவையும் வழங்க சீனா தயாராக உள்ளது" என்று கூறினார்.

     எந்த எண்ணமும் இல்லை

    எந்த எண்ணமும் இல்லை

    அதேபோல், இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்புவதில் காப்புரிமை சிக்கல் உள்ளதாக ரஷ்யா தயங்கிய நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனமோ, 'ரஷ்யா இந்தியாவுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் விவகாரத்தில் காப்புரிமை நோட்டீஸ் அனுப்பும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்து ரூட்டை க்ளியர் செய்திருக்கும் நிலையில், இந்த வார இறுதியில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த தகவலை ரஷ்யா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    15 countries to help India to fight COVID-19 - கொரோனா வைரஸ்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X