டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3வது அலை சாத்தியம்.. 40 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்.. ஐசிஎம்ஆர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி : ஐசிஎம்ஆர் நடத்திய 4வது செரோ சர்வேயில் , மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், ஆறு வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சுமார் 40 கோடி மக்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அரசு எச்சரித்துள்ளது. எதிர்காலத்தில் நோய்த்தொற்றின் புதிய அலைகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே மக்கள்தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற ஐ.சி.எம்.ஆரின் 4 வது தேசிய கோவிட் செரோ கணக்கெடுப்பு 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் 67.6 சதவீதமாக இருந்தது,

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங். எம்.பிக்கள் போராட்டம்விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங். எம்.பிக்கள் போராட்டம்

ஆய்வு எப்படி

ஆய்வு எப்படி

6-9 வயதுடையவர்களில் செரோ பாதிப்பு 57.2 சதவீதமாகவும், 10-17 வயதுடையவர்களில் 61.6 சதவீதமாகவும், 18-44 ஆண்டுகளில் 66.7 சதவீதமாகவும், 45-60 வயது உடையவர்களிடம் 77.6 சதவீதமாகவும், 60 வயதை கடந்தவர்களுக்கு இது 76.7 சதவீதமாக இருந்தது. இரண்டாவது அலைகளை பரப்புவதில் டெல்டா பிறழ்வு வைரஸின் பங்கு அதிகமாக இருந்தது. இதேபோல் தடுப்பூசி போடாது காரணம் என்று அரசு கூறியது.

செரோ பாதிப்பு

செரோ பாதிப்பு

முன்னதாக டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட மூன்றாவது செரோ கணக்கெடுப்பில், செரோ பாதிப்பு 24.1 சதவீதமாக இருந்தது. தவிர, நான்காவது சுற்றில் கணக்கெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர் SARS-CoV-2 க்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

எனவே தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளித்த போதும், மனநிறைவுக்கு இடமில்லை என்றும் ம் கோவிட்க்கு-பொருத்தமான நடத்தை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை தொடந்து கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு

மூன்றில் இரண்டு பங்கு

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா, "ஆறு வயதிற்கு மேற்பட்ட பொது மக்களில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 67.6 சதவீதம் பேர் சமீபத்திய தேசிய செரோ கணக்கெடுப்பில் SARS-CoV-2 ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. "மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரிடம் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் இல்லை, அதாவது சுமார் 40 கோடி மக்கள் இன்னும் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளார்கள். ஆன்டிபாடிகள் இல்லாதவர்கள் தொற்று அலைகளின் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர் பார்கவா கூறினார்.

English summary
"A third of the population did not have SARS-CoV-2 antibodies, which means approximately 40 crore people are still vulnerable to COVID-19 infection," Those without antibodies run the risk of infection waves, Dr Bhargava said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X