டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சியை கவிழ்க்க 6300 கோடி! இதுக்கு ஜிஎஸ்டி போடாமலே இருக்கலாம்ல! பாஜகவை வெளுத்து வாங்கிய கெஜ்ரிவால்!

Google Oneindia Tamil News

டெல்லி : பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக 6300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியவுக்கு எதிராக சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில், தனது கட்சியை உடைக்க பாஜக சதி செய்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு சுமார் ஏழு ஆண்டுகளாக ஆட்சி நடத்திவருகிறது. இந்த அரசு 2021-22 புதிய மதுக் கொள்கையை கொண்டுவந்தது.

 மற்ற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க..ரூ 6,300 கோடி செலவு செய்த பாஜக! அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் புகார்! மற்ற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க..ரூ 6,300 கோடி செலவு செய்த பாஜக! அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் புகார்!

டெல்லி அரசு

டெல்லி அரசு

இந்நிலையில் மதுபானங்களை சில்லறை விற்னை செய்து கொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசே வாபஸ் பெற்றது. இந்த கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

மனிஷ் சிசோடியா

மனிஷ் சிசோடியா

மதுபான நிறுவனங்கள், பார்களுக்கு வழங்கிய டென்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர், சுங்க அமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தின. இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறிய மனிஷ் சிசோடியா, இதில் இருந்து தப்பிக்க தன்னை பாஜகவில் சேர்ந்து கொள்ள பேரம் நடைபெற்றதாகவும் அவர் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆட்சியை கவிழ்க்க சதி

ஆட்சியை கவிழ்க்க சதி

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக 6300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவையில் பேசிய அவர்,"ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த பணத்தை, சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துகிறது. மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளதால், விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

 பாஜக மறுப்பு

பாஜக மறுப்பு

பாஜக அல்லாத அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளனர். அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை.மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை" என கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் இந்த குற்றச்சாட்டை பாஜக முற்றிலும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Arvind Kejriwal, Chief Coordinator of Aam Aadmi Party has said that BJP has spent 6300 crore rupees to overthrow the government in non-BJP states ; பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக 6300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X