மோடி பிறந்த நாளில் 'சம்பவம்' ?முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்த கெஜ்ரிவால் கோரிக்கை- ஆட்சி கலைப்பு?
டெல்லி: டெல்லி முதல்வர் பதவியில் இருந்து செப்டம்பர் 17-ந் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அத்துடன் டெல்லி யூனியன் பிரதேச ஆம் ஆத்மி ஆட்சியைக் கலைத்து நவம்பர் மாதம் தேர்தலை நடத்தவும் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி தலைநகர் டெல்லியில் பரபர அரசியல் நிகழ்வுகள் அரங்கேற இருப்பதையே கெஜ்ரிவாலின் அறிவிப்பு வெளிப்படுத்தி இருக்கிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சிறையில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, முதல்வர் பதவியில் இருந்து 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மேலும் தாம் மக்களை சந்தித்து மக்கள் மீண்டும் தீர்ப்பளித்தால்தான் முதல்வராக பதவியேற்பேன் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆட்சியைக் கலைக்க கெஜ்ரிவால் பரிந்துரைக்க உள்ளார். இதனால் நவம்பர் மாதம் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த பட்டியலில் தற்போது டெல்லி சட்டசபை தேர்தலும் இணைய உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய கெஜ்ரிவால், 2 நாட்களில் ராஜினாமா செய்வேன் என அறிவித்துள்ளார். அதாவது செப்டம்பர் 17-ந் தேதி தமது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் பிரதமர் மோடியின் பிறந்த நாள். அன்றைய தினம் தலைநகர் டெல்லியில் முதல்வர் பதவி ராஜினாமா, ஆட்சியை கலைக்கப் பரிந்துரை என அடுத்தடுத்த பரபரப்புகளை அரங்கேற்ற இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications