Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களுக்கு மெட்ரோ கட்டணத்தில் தள்ளுபடி, இலவச பேருந்து.. ஆம் ஆத்மியின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை மற்றும் மெட்ரோ கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 59 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

delhi election 2025 arvind kejriwal 2025

இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியும், மெட்ரோ கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மி அரசு கல்விக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏழைகள் பலர் பணமில்லாததால் கல்வியை இழந்து வருகின்றனர். ஆம் ஆத்மி அரசு மீண்டும் அமைந்தால் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்படும். ஏற்கனவே மாணவிகளுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு 50 சதவீத சலுகை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், டெல்லியில் மெட்ரோ ரயிலை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்படுத்தி வருவதாக கட்டணமும் உயர்ந்துள்ளது. சாதாரண ஏழை மாணவர் இதனால் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் மாணவர்களுக்கு 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும். இந்த தள்ளுபடியை மத்திய அரசும், டெல்லி அரசாங்கமும் சமமாக ஏற்க வேண்டும். ஏற்கனவே ஆம் ஆத்மி அரசு சார்பில் நகரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பிற்பகல் மாநிலப் பிரிவு அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+