ரூபாயில் லட்சுமி ஜி கணேஷ் ஜி! எல்லோருமே பாராட்டுறாங்க மோடி ஜி! என்னென்ன சொல்றாரு பாருங்க கெஜ்ரிவால்!
டெல்லி : இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருக்கிறார்.
பாஜகவுக்கு கடுமையான அழுத்தம் தரும் கட்சிகளில் ஆம் ஆத்மி கட்சி முக்கியமான ஒன்று. பஞ்சாபில் காங்கிரசை தோற்கடித்த கையோடு குஜராத்திலும் கால் பதிக்க பாஜகவுக்கு எதிராக அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புதிய பரபரப்பு ஒன்றினை பற்ற வைத்திருக்கிறார் கெஜ்ரிவால். ஆனால் இந்த முறை பாஜகவுக்கு எதிர்ப்பாக இல்ல கிட்டத்தட்ட ஆதரவளிப்பது போல. அது என்னவென்றால் ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான்.

அரவிந்த் கெஜ்ரிவால்
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்," எத்தனை நடவடிக்கைகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் கடவுளின் ஆசி இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் லட்சுமியின் படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் வளர்ச்சி காணும்" எனக் கூறியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் கடும் கண்டனங்களையும் மற்றொரு தரப்பினர் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ரூபாயில் லட்சுமி
இந்நிலையில் இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில்," நாட்டின் 130 கோடி மக்கள் இந்திய நாணயத்தின் ஒருபுறம் காந்திஜியின் படமும், மறுபுறம் ஸ்ரீ கணேஷ் ஜி மற்றும் லட்சுமி ஜியின் படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இறைவனின் ஆசீர்வாதம்
இன்று நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், வளரும் மற்றும் ஏழை நாடுகளில் பட்டியலிலே இந்தியா கணக்கிடப்படுகிறது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். ஏன்? ஒருபுறம் நாட்டுமக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். மறுபுறம் நம் முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் வேண்டும்.

பிரதமருக்கு கடிதம்
சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் ஆகியவை ஒன்றாக சேர்வதன் மூலம் மட்டுமே நாட்டை முன்னேற்றும். நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை பகிரங்கமாக கோரிக்கை விடுத்தேன். அப்போதிருந்து, இந்த ஆலோசனைக்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது, இது குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்." என கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications